போலி இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை போலி இன்ஷூரன்ஸ் நிறுவனம் ஐ.ஆர்.டி.ஏ.ஐ., எச்சரிக்கை ...  பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும்  ‘வேதாந்தா’ பொதுத் துறை நிறுவனங்களை வாங்க ரூ.73 ஆயிரம் கோடியை திரட்டும் ‘வேதாந்தா’ ...
கோத்ரேஜ் அறிமுகப்படுத்தும் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2021
15:16

கோத்ரேஜ் குழுமத்தின் முன்னணி நிறுவனமாக விளங்கும் கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ், நாட்டின் சுகாதார உள்கட்டமைப்பை வடிவமைப்பதில் மேலும் ஒரு படி முன்னேறும் வகையில், தனது வர்த்தகப் பிரிவான கோத்ரேஜ் அப்ளையன்சஸ் மூலமாக இந்தியாவில் செயல்படுத்தப்படும் கோவிட் தடுப்பூசி நடவடிக்கைகளில் இணைந்துள்ளது. அதிக உணர்திறன் கொண்ட தடுப்பூசி மருந்துகளைச் சரியான வெப்பநிலையில் பராமரிக்கும் மருத்துவ குளிரூட்டும் தீர்வுகளை இந்தியாவிலேயே தயாரித்துள்ளது.

தடுப்பூசி குளிரூட்டும் வசதியை மேலும் வலுப்படுத்தும் வகையில், அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களை அறிமுகப்படுத்துகிறது. இது -80°C க்கும் குறைவான வெப்பநிலையிலும் உயிர் காக்க உதவும் தடுப்பூசிகளைப் பாதுகாக்கும் திறன் கொண்டவை. தற்போது மற்ற நாடுகளில் பயன்படுத்தப்படும் எம்ஆர்என்ஏ-வை அடிப்படையாகக் கொண்ட தடுப்பூசிகளுக்கு மிகப்பொருத்தமான அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களை தனது தயாரிப்பு வரிசையில் இடம்பெற வைத்துள்ளது கோத்ரேஜ் அப்ளையன்சஸ்.

உள்ளடுக்கு அமைப்பை செயல்பாட்டு விதியாகக் கொண்ட கோத்ரேஜ் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசரில் வெப்பநிலையைப் பரிமாற்றம் செய்யும் தட்டு ஒன்று உள்ளது. இது, முதன்மையான மற்றும் இரண்டாவது அடுக்கின் இடையே வெப்ப பரிமாற்றியாகச் செயல்படுகிறது. இது, இரண்டாவது அமைப்பிலுள்ள அழுத்தத்தைக் குறைத்து வெப்பநிலை குறைய வழிவகுக்கிறது. ஒருவேளை தேவையற்ற அழுத்தம் உருவானால் இரண்டாம் நிலை அழுத்தியைக் காக்கும் வகையில், கோத்ரேஜ் அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்களில் அலாரத்துடன் கூடிய பாதுகாப்பு அமைப்புகள் உட்கட்டமைப்பில் இடம்பெற்றுள்ளன.

வெப்பநிலை உட்புகுதலைத் தவிர்க்க உதவும் முத்திரை அண்ட் உள்பாகத்திலுள்ள தனிக்கதவு, செயல்பாட்டின்போது ஒட்டுமொத்த திறனை மேம்படுத்துகிற, நீண்ட நாட்களுக்குச் செயல்படவல்ல, இரண்டாவது அடுக்கிற்கான எண்ணெய் மீட்பு ஆகியன இதில் உள்ளன. மேலும், சேமித்து வைக்கப்படுகிற மருந்துகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்த உதவுகிற திரவ கார்பன் டை ஆக்சைடு அல்லது திரவ நைட்ரஜன் டை ஆக்சைடு ஆகியனவும் பேக்-அப் ஆக உள்ளன. குளிரூட்டும் அமைப்பு செயல்படாமல் போனாலோ அல்லது மின் தடை ஏற்பட்டாலோ, 48 மணி நேரத்துக்கும் மேலாக ஒரே சீரான வெப்பநிலையை தக்கவைக்க இவை உதவும்.

ஓராண்டுக்கு 12,000 மருந்துகளை வைத்திருக்கும் திறன் கொண்டவை அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள். தற்போது உலகம் முழுக்க இதற்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், இதன் கொள்ளளவை 30,000 ஆக உயர்த்தும் முயற்சியில் கோத்ரேஜ் அப்ளையன்சஸ் ஈடுபட்டுள்ளது. கடைக்கோடியில் தடுப்பூசி பயன்பாட்டை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்ல உதவும் வகையில், இதர வழிகளைக் கண்டறியும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது கோத்ரேஜ் அப்ளையன்சஸ்.

சமீபத்திய மேம்பாடுகள் குறித்து கோத்ரேஜ் அண்ட் பாய்ஸ் மேனுபேக்சரிங் கம்பெனி லிமிடெட்டின் தலைவர் அண்ட் நிர்வாக இயக்குனர் ஜம்ஷைத் கோத்ரேஜ் பேசுகையில், “பல தசாப்தங்களாக குளிரூட்டும் தொழில்நுட்பத்தில் நிபுணத்துவத்துடன் விளங்குகிற கோத்ரேஜ், தடுப்பூசிகளுக்கான மேம்படுத்தப்பட்ட குளிர் சேமிப்பு தீர்வுகள் மற்றும் விநியோகம் மூலமாக, கோவிட்-19-க்கு எதிரான போரில் அரசுகளுக்கு உதவுகிறது. எங்களது புதிய அறிமுகமான அல்ட்ரா லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள், எதிர்காலத்தில் தடுப்பூசிகளுக்கேற்ப இந்தியா தயார்நிலையில் இருக்க உதவும். ” என்று தெரிவித்தார்.

இந்த மேம்பாடுகள் பற்றி கோத்ரேஜ் அப்ளையன்சஸின் வர்த்தகத் தலைவர் மற்றும் நிர்வாக துணைத் தலைவர் கமல் நந்தி பேசுகையில், “மிகச்சிக்கலான காலகட்டத்தில் இந்தியாவில் ஒரு வலுவான தடுப்பூசி குளிரூட்டும் வசதியை விரிவுபடுத்துவதற்கான முயற்சியில் எங்களது குளிரூட்டும் நிபுணத்துவம் பயன்படுத்தப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். எங்களது புதிய அல்ட்ரா – லோ டெம்பரேச்சர் ப்ரீசர்கள் -80°Cக்கும் கீழான வெப்பநிலையை அளிக்கின்றன” என்று தெரிவித்தார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)