பதிவு செய்த நாள்
18 மார்2021
21:00

பெங்களூரு:ஒருவருக்கு கடன் வழங்கலாமா, கூடாதா என்பதை முடிவு செய்வதற்கு உதவும் வகையில், 'சிபில்' எனும் மதிப்பீட்டு நிறுவனம் இருப்பது போல, காப்பீட்டு நிறுவனங்களுக்கு உதவும் வகையில், 'பெடோ' எனும் நிறுவனம், இத்தகைய முயற்சியில் ஈடுபட்டு உள்ளது.
பெங்களூருவை சேர்ந்த இந்நிறுவனம், தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றின் மூலம், ஒருவரின் ஆரோக்கியம் குறித்த அனைத்து தகவல்களையும் திரட்டி, காப்பீட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது.
இது குறித்து இந்நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பிரசாந்த் மாதவனா கூறியதாவது:ஒருவரிடம் பல்வேறு கேள்விகள் கேட்டு, அவர் குறித்த ஆரோக்கிய மதிப் பெண்ணை தயார் செய்கிறோம். 600 புள்ளிகளுக்கு மேல் இருக்கும்பட்சத்தில், ஒருவர் முழு ஆரோக்கியமாக இருக்கிறார் என அறிந்து கொள்ளலாம்.
இத்தகவல்களை காப்பீட்டு நிறுவனங்கள் பயன்படுத்திக் கொள்ள லாம்.சம்பந்தப்பட்ட நபருக்கும், அவரது மதிப்பீட்டு புள்ளி தெரிய வரும் நிலையில், அவரும் தன் உடல் நலம் குறித்து எச்சரிக்கையாக இருக்க முடியும். இரு தரப்பினருக்கும் இந்த தொழில்நுட்பம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|