பதிவு செய்த நாள்
18 மார்2021
21:17

மும்பை:நடப்பு நிதியாண்டில், உலகளவில் மிகச் சிறப்பாக செயல்பட்ட பங்குச் சந்தைகள் பட்டியலில், இந்தியாவும் இடம்பெற்று உள்ளது. மேலும், இந்திய பங்குச் சந்தை முதலீட்டாளர்கள், 94 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு லாபம் அடைந்துள்ளனர்.
நடப்பு நிதியாண்டில், மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டுள்ள நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 94 லட்சம் கோடி ரூபாய் அதிகரித்து, 207.3 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.கடந்த, 2020ம் ஆண்டு, மார்ச் 31ம் தேதி நிலவரப்படி, மும்பை பங்குச் சந்தையில் பட்டியலிடப்பட்டிருக்கும் நிறுவனங்களின் சந்தை மதிப்பு, 113.5 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.
கொரோனா தாக்கத்தால், உலகின் பல நாடுகளின் சந்தைகளிலும், பங்குகளை விற்கும் போக்கே அதிகரித்துஇருந்தது.இந்தியாவில், அரசு மற்றும் ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் பொருளாதார மீட்சிக்கு வழிவகுத்தன. இதையடுத்து, சந்தை பல புதிய உச்சங்களை தொட்டது.இந்நிலையில், வரும் நிதியாண்டிலும் இந்திய சந்தைகள் சிறப்பாக செயல்படும் என்றும், எல்.ஐ.சி., போன்ற பெரிய நிறுவனங்களின் பங்கு வெளியீடுகளும், சந்தையின் மதிப்பை அதிகரிக்க உதவும் என்றும் நிபுணர்கள் தெரிவித்து உள்ளனர்.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|