பதிவு செய்த நாள்
18 மார்2021
21:20

புதுடில்லி:விரைவில், ‘ஆதித்யா பிர்லா சன் லைப் ஏ.எம்.சி.,’ நிறுவனமும் புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் என எதிர்பார்க்கலாம்.
இந்நிறுவனம், புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கு, நிர்வாக குழு ஒப்புதல் வழங்கி இருக்கிறது. ‘ஆதித்ய பிர்லா குழுமம்’ மற்றும் கனடாவை சேர்ந்த, ‘சன் லைப் பைனான்ஷியல்’ ஆகியவற்றின் கூட்டு நிறுவனமாகும், ஆதித்யா பிர்லா சன் லைப் ஏ.எம்.சி., கடந்த ஆண்டு செப்டம்பர் இறுதி நிலவரப்படி, கிட்டத்தட்ட, 2.38 லட்சம் கோடி ரூபாய் மியூச்சுவல் பண்டு முதலீட்டை, இந்நிறுவனம் மேலாண்மை செய்து வருகிறது.
புதிய பங்கு வெளியீட்டுக்கு, இந்நிறுவனம் வருவது குறித்து, ஆதித்யா பிர்லா கேப்பிட்டலின் நிர்வாக குழு, தற்போது கொள்கை அளவிலான அனுமதியை வழங்கி இருக்கிறது.சந்தை நிலவரம் மற்றும் இதர அனுமதிகள் ஆகியவற்றை பொறுத்து, பங்கு வெளியீட்டுக்கு வரலாம் என அனுமதி வழங்கப் பட்டிருக்கிறது. மற்றபடி, எவ்வளவு நிதி திரட்ட திட்டமிட்டுள்ளது என்பது போன்ற தகவல்கள் எதுவும் இன்னும் வெளியிடப்படவில்லை.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|