பதிவு செய்த நாள்
27 மார்2021
20:13

புதுடில்லி:வாகனப் புகையில், மாசுபாட்டை குறைக்கும் திட்டத்தின் அமலாக்கத்தை தள்ளி வைக்குமாறு, வாகன கூட்டமைப்பு விடுத்த கோரிக்கையை மத்திய அரசு நிராகரித்து உள்ளது.
மத்திய அரசு, காற்று மாசுபாட்டை குறைக்க, பசுமை தொழில்நுட்ப வாகன தயாரிப்பை ஊக்குவித்து வருகிறது. இதன்படி, வாகன புகையில் மாசு குறைவாகவும், மேம்பட்ட எரிபொருள் திறனிலும் செயல்படுவதற்கான ‘கேப்’ விதிமுறை, 2017ல் அறிமுகமானது. இதில், முதற்கட்டமாக, 1 புதிய கார், 1 கிலோ மீட்டர் செல்லும் போது வெளியிடும் புகையில், கரியமில வாயு, 130 கிராம் மட்டுமே இருக்க வேண்டும் என, தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையொட்டி, வாகன புகையில் மாசுபாட்டை குறைப்பதற்கான தொழில்நுட்பங்களில், தயாரிப்பு நிறுவனங்கள் முதலீடு செய்தன. இந்நிலையில், கேப் விதிமுறையில், அடுத்த கட்ட கட்டுப்பாடு, 2022, ஏப்., 1ல் அமலுக்கு வர உள்ளது.இதில், 1 கிலோ மீட்டர் செல்லும் போது, கார் வெளியிடும் புகையில், கரியமில வாயுவின் அளவு, 113 கிராம் ஆக குறைத்து நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இந்த விதிமுறையை அமல்படுத்த அதிக முதலீடு தேவைப்படுவதால், புதிய விதிமுறையின் அமலாக்கத்தை தள்ளி வைக்குமாறு, வாகன தயாரிப்பு நிறுவனங்கள், மத்திய அரசிடம் கோரிக்கை விடுத்தன.அதை ஏற்க மறுத்துள்ள மத்திய அரசு, திட்டமிட்டபடி, அடுத்த ஆண்டு, புதிய விதிமுறை அமலுக்கு வரும் என உறுதியாக தெரிவித்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|