பதிவு செய்த நாள்
28 மார்2021
22:37

இந்த ஆண்டு தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட்டில், தனிநபர் வருமானவரி உச்ச
வரம்பில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை என்றாலும், முக்கிய மாற்றங்கள்
அறிவிக்கப்பட்டன. இவற்றில் சில, நிதியாண்டின் போக்கில் செயல்பாட்டிற்கு வரும் நிலையில், ஒரு சில மாற்றங்கள் நிதியாண்டின் துவக்கம் முதல் அமலுக்கு வருகின்றன.
புதிய நிதியாண்டு பிறக்க உள்ள நிலையில், வருமான வரிதொடர்பாக, உடனடியாக அமலுக்கு வரும் மாற்றங்களை அறிந்திருப்பது அவசியம்.
விண்ணப்ப படிவங்கள்:
வரி தாக்கல் செய்பவரின் நலனுக்காக, வருமான வரித்துறை, முன்னதாக தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தை அறிமுகம் செய்தது. இது மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. எனவே, வருமான வரி தாக்கல் செய்பவர்கள், ஏற்கனவே பூர்த்தி செய்யப்பட்ட படிவத்தில், ஊதியம், வட்டி, டிவிடெண்ட் உள்ளிட்ட தகவல்களை சரி பார்த்துக்கொள்ள வேண்டும்.
பி.எப்., பிடித்தம்:
பி.எப்., திட்டத்தில் ஆண்டுக்கு, 2.50 லட்சம் ரூபாய்க்கு மேல், ஊழியர் தரப்பில் செலுத்தப்படும் தொகை மீதான வட்டி, வரிக்கு உட்படும் என பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நிதி மசோதாவில், இந்த வரம்பு, ஐந்து லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதிக அளவில் பி.எப்., பங்களிப்பு செலுத்துபவர்கள் இதை மனதில் கொள்ள வேண்டும்.
வயதானவர்களுக்கு சலுகை:
எழுபத்து ஐந்து வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமகன்கள், வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய வேண்டியதில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. பென்ஷன் மற்றும் வட்டி வருமானம் மட்டும் பெறுபவர்களுக்கே இது பொருந்தும். இரண்டும் ஒரே வங்கியில் அமைந்திருக்க வேண்டும்.
வரி பிடித்தம்:
எப்போதுமே வருமான வரி கணக்கு தாக்கல் செய்வது மிகவும் நல்லது. வரி கணக்கு தாக்கல் செய்வதில் பல்வேறு அனுகூலங்கள் இருக்கின்றன. இவ்வாறு தாக்கல் செய்யாதவர்கள், கடந்த இரண்டு ஆண்டுகளில் ஐம்பதாயிரம் ரூபாய்க்கு மேல் டி.டீ.எஸ்., பிடித்தம்
பெற்றிருந்தால், 5 சதவீதம் டி.டீ.எஸ்., அல்லது டி.சி.எஸ்., செலுத்த வேண்டும்.
புதிய முறை:
முந்தைய ஆண்டு பட்ஜெட்டில், வருமான வரி தாக்கல் செய்பவர்களுக்கான புதிய முறை அறிமுகம் செய்யப்பட்டது. அதிக சலுகைகள் கொண்ட, ஆனால் வழக்கமான சில பிடித்தங்கள் பொருந்தாத இந்த முறையை தேர்வு செய்ய வேண்டும். வரி தாக்கல் செய்யும் போது இதை தீர்மானித்துக் கொள்ளலாம்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|