பதிவு செய்த நாள்
30 மார்2021
19:58
புதுடில்லி:ஜெர்மனி நாட்டை சேர்ந்த, கார் தயாரிப்பு நிறுவனமான, ‘போக்ஸ்வேகன்’ அதன் பெயரை, ‘வோல்ட்ஸ்வேகன்’ என மாற்ற திட்டமிட்டுள்ள விபரத்தை, தவறுதலாக வெளியிட்டுவிட்டது.
கடந்த திங்கள் அன்று அதிகாலையில், இந்த அதிகாரப்பூர்வ பெயர் மாற்ற திட்டம் குறித்த விபரங்கள், எதிர்பாராதவிதமாக வெளியிடப்பட்டுவிட்டது.பெயர் மாற்றம் குறித்து, பத்திரிகைகளுக்கு வழங்குவதற்காக தயாரிக்கப்பட்ட செய்திக்குறிப்பு, எதிர்பாராதவிதமாக அதன் இணையதளத்தில் வெளியிடப்பட்டுவிட்டது. ஆனால், சற்று நேரத்திலேயே அந்த செய்திக் குறிப்பு இணையதள பக்கத்திலிருந்து நீக்கப்பட்டு விட்டது.
போக்ஸ்வேகன் நிறுவனத்தின் பெயர் மாற்றம், மே மாதத்தில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மின்சார வாகனத்துக்கான எதிர்காலத்தை நோக்கிய நிறுவனத்தின் பார்வையை வலியுறுத்தும் வகையில், அமெரிக்காவில் இதன் பெயர், வோல்ட்ஸ்வேகன் என இருக்கும் என்றும் தெரியவந்துள்ளது.
தவறுதலாக வெளியிடப்பட்ட செய்திக் குறிப்பில், நிறுவனத்தின் அடுத்து வரும் அனைத்து மின் வாகனங்களும், வோல்ட்ஸ்வேகன் எனும் பெயரைத் தாங்கி வரும் என குறிப்பிடப் பட்டிருந்தது.போக்ஸ்வேகன் நிறுவனம், 2030ம் ஆண்டிற்குள், ஐரோப்பிய சந்தையில், மின்வாகனங்களின் பங்களிப்பை, 35 சதவீதத்திலிருந்து, 70 சதவீதமாக அதிகரிக்கவும் திட்டமிட்டுள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|