பதிவு செய்த நாள்
28 ஏப்2021
23:32

புதுடில்லி:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில், ரியல் எஸ்டேட் துறையில், நிறுவன முதலீடு, 21 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது என ஜே.எல்.எல்., இந்தியா நிறுவனம் தெரிவித்துள்ளது.
இது குறித்து, மேலும் தெரிவித்துள்ளதாவது:கடந்த ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலகட்டத்தில், ரியல் எஸ்டேட் துறையில் நிறுவனங்களின் முதலீடு, கிட்டத்தட்ட 6,915 கோடி ரூபாயாக அதிகரித்து உள்ளது. இது, இந்திய ரியல் எஸ்டேட் துறை மீதான அவர்களின் தொடர்ச்சியான நம்பிக்கையை எடுத்துக்காட்டுவதாக இருக்கிறது.
இருப்பினும், நிறுவன முதலீட்டாளர்கள், குடியிருப்பு பிரிவில் செய்துள்ள முதலீடு குறைந்துள்ளது. கடந்த ஆண்டில், ஜனவரி முதல் மார்ச் வரையிலான காலத்தில் செய்யப்பட்ட முதலீடு, 555 கோடி ரூபாயாக இருந்தது. இந்நிலையில் நடப்பு ஆண்டில், 435 கோடி ரூபாயாக குறைந்துவிட்டது.ஆனால், அலுவலக கட்டட சந்தையில், வரவு, கடந்த ஆண்டில், 3,788 கோடி ரூபாயாக இருந்தது, இப்போது, 6,480 கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.
இந்தியாவில், ஹைதராபாத்தில் தான் அதிக முதலீடுகள் வந்துள்ளன. மதிப்பீட்டு காலத்தில் வந்த முதலீடுகளில், 42 சதவீதம் இங்கு வந்துள்ளது. மும்பையில், 21 சதவீதம் வந்துள்ளது. ஆனால்,கொரோனா பாதிப்பு காரணமாக, ஜூன் காலாண்டில் இந்த வளர்ச்சியை எதிர்பார்க்க இயலாது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|