பதிவு செய்த நாள்
29 ஏப்2021
21:06

மும்பை:ரிசர்வ் வங்கி, அதன் நிதிக்கொள்கையை வகுக்க உதவியாக இருக்கும் வகையில், பணவீக்க எதிர்ப்பார்ப்புகள், நுகர்வோர் நம்பிக்கை ஆகியவை குறித்து, வீடுகளில் கணக்கெடுப்பு நடத்துவது வாடிக்கை.
அந்த வகையில், மே மாத சுற்று குறித்து ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. இந்த சுற்றில், விலைகளின் போக்கு மற்றும் பணவீக்கம் ஆகியவை குறித்து, கிட்டத்தட்ட, 6 ஆயிரம் குடும்பத்தினரிடம் ஆய்வு செய்யப்படும். தேர்ந்தெடுக்கப்பட்ட, 18 நகரங்களில் இந்த கணக்கெடுப்பு நடைபெற இருக்கிறது.
விலைகளின் போக்கு, மூன்று மாதங்களில் எப்படி இருக்கும்; ஓர் ஆண்டில் எப்படி இருக்கும் என்பது குறித்தும் கேட்கப்படும்.இதேபோல், நுகர்வோர் நம்பிக்கை குறித்த மே மாத சுற்றில், 5,400 பேரிடம் ஆய்வு மேற்கொள்ளப்படும். இது சென்னை, மும்பை, திருவனந்தபுரம் உள்ளிட்ட, 13 தேர்ந்தெடுக்கப்பட்ட நகரங்களில் நடத்தப்படும்.
மேலும், பொருளாதார நிலைமைகள், வேலை வாய்ப்புகள், விலைவாசி உள்ளிட்டவை குறித்தும் கேட்டு அறிந்துகொள்ளப்படும்.இந்த ஆய்வை தனிப்பட்ட ஏஜென்சி ஒன்றின் வாயிலாக ரிசர்வ் வங்கி நடத்த உள்ளது. இந்த ஆய்வை முன்பு போல நேரிடையாக சென்று மேற்கொள்ளாமல், தொலைபேசி வாயிலாகவே மேற்கொள்ளப்பட உள்ளது. கொரோனா தொற்று காரணமாக இவ்வாறு முடிவு செய்யப்பட்டுள்ளது.
ரிசர்வ் வங்கியின் அடுத்த நிதிக் கொள்கை குழு கூட்டம், ஜூன் 2ம் தேதி முதல், 4ம் தேதி வரை நடைபெற இருக்கிறது.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|