‘கடந்த ஆண்டை போல பொருளாதார பாதிப்பு இருக்காது’ ‘கடந்த ஆண்டை போல பொருளாதார பாதிப்பு இருக்காது’ ...  17 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’ 17 ஆயிரம் கோடி ரூபாய் வருமான வரி ‘ரீபண்டு’ ...
நாளை ‘அக்‌ஷய திரிதியை’ விற்பனை தங்க நகை விற்பனையாளர்கள் கவலை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

12 மே
2021
20:59

மும்பை:தங்க நகைகள் வாங்குவதற்கு சிறந்த நாளாக கருதப்படும், ‘அக்‌ஷய திரிதியை’ நாளைய தினம் வருகிறது. இந்நிலையில் இரண்டாவது அலை காரணமாக, இந்த ஆண்டும் விற்பனை பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

பெரும்பாலான மாநிலங்களில், ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதால், கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும், அக்‌ஷய திரிதியை நாளின் போது, தங்க நகை வியாபாரம் பாதிக்கப்பட்டுவிடும் என, துறையினர் கவலை தெரிவித்து உள்ளனர்.

இது குறித்து, அகில இந்திய நவரத்தினங்கள் மற்றும் தங்க நகை உள்நாட்டு கவுன்சிலின் தலைவர் ஆஷிஷ் பெத்தே கூறியதாவது:கடந்த ஆண்டிலாவது, ஆன்லைன் வாயிலாகவும், தொலைபேசி வாயிலாகவும், ‘ஆர்டர்’கள் பெறப்பட்டு, விற்பனை நடைபெற்றது. ஆனால், இந்த ஆண்டு, அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாத காரணத்தினால், அதுவும் குறைந்து போய்விட்டது.

அத்தியாவசிய பொருட்கள் பட்டியலில் இடம்பெறாததால், ‘ஆர்டர்’ பெற்றாலும், ‘சப்ளை’ செய்ய முடியாத நிலையுள்ளது.இந்த நிதியாண்டில் நடந்த ஒரே நல்ல விஷயம், பல திருமணங்கள் இந்த ஆண்டுக்கு ஒத்தி வைக்கப்பட்டு, தற்போதைய ஊரடங்குக்கு முன்பாகவே பலர் நகைகளை வாங்கியது தான்.இவ்வாறு அவர் கூறினார்.

கொரோனாவால், கடந்த ஆண்டில் குடும்ப உறுப்பினரை இழந்த குடும்பமோ, அல்லது, இந்த ஆண்டில் இழந்த குடும்பமோ, நிச்சயமாக நாளை நகை வாங்க வரமாட்டார்கள்.இப்படி, நிச்சயமற்ற நிலை ஏற்பட்டிருக்கும் சூழலில், நுகர்வோரின் நம்பிக்கை மிகவும் குறைந்து உள்ளது.

மேலும், நோய் தொற்று பரவல் காரணமாக, தற்போது பணத்தை ரொக்கமாக கையில் வைத்துக்கொள்வதையே பலரும் விரும்புவர். தங்க நகைகளில் முதலீடு செய்ய முன்வர தயங்குவர் என சந்தை நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த ஆண்டு ஆகஸ்டுடன் ஒப்பிடும்போது, தங்கத்தின் விலை கிட்டத்தட்ட, 20 சதவீதம் அளவுக்கு சரிந்துள்ளது. எனவே, விலை குறைந்ததன் காரணமாக, சிறிய அளவிலாவது விற்பனை நடக்கும் என எதிர்பார்க்கலாம் என்றும் சிலர் தெரிவித்துள்ளனர்.

கடந்த நிதியாண்டில், தங்க நகை வணிகம் கிட்டத்தட்ட, 70 சதவீதத்துக்கும் அதிகமாக பாதிக்கப்பட்டது. இந்த நிதியாண்டு, ஏப்ரலில் துவங்கியதுமே ஊரடங்குகள் பிறப்பிக்கப் பட்டு விட்டன. இதனால், அரசு ஊக்கச் சலுகைகள் தருமா என எதிர்பார்க்கின்றனர் இத் துறையினர்.

இந்நிலை குறித்து, உலக தங்க கவுன்சிலின் நிர்வாக இயக்குனர் சோமசுந்தரம் கூறிய தாவது: ஊரடங்குகளால் நேரடி விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இருப்பினும், கடந்த ஆண்டே பல நிறுவனங்கள் ஆன்லைன் மூலமாக விற்பனைக்கான பலதொழில்நுட்ப வசதிகளை அமைத்துக் கொண்டு விட்டன. இது சற்று ஆறுதலான விஷயம். சில மாநிலங்களில் பாதிப்பு குறைவாக இருப்பதால், அங்கு ஓரளவு விற்பனை நடைபெற வாய்ய்ப்பிருக்கிறது.இவ்வாறு கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி:முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ், ‘கூகுள்’ நிறுவனத்துடன் இணைந்து, மலிவு விலையிலான ஸ்மார்ட்போன்களை ... மேலும்
business news
புதுடில்லி:அண்மையில், மின்சார இரு சக்கர வாகனங்களின் விற்பனையை அதிகரிக்கும் வகையில், மானிய திட்டமான, ‘பேம் ... மேலும்
business news
வேகமாக வளர்ந்து வரும் சிறு வணிகங்களுக்கும், நன்கு நிறுவப்பட்ட பெரிய நிறுவனங்களுக்கும் இடையில், ஒரு இனிப்பான ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த 12 மாதங்களில், நாட்டில் உள்ள நுகர்வோர்களில் பாதி பேர், சீனாவில் தயாரிக்கப்பட்ட பொருட்களை ... மேலும்
business news
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், தங்க இ.டி.எப்., திட்டங்களில் மேற்கொள்ளப்படும் முதலீடு, 57 சதவீதம் சரிவைக் ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)