பதிவு செய்த நாள்
13 மே2021
20:51

புதுடில்லி:ஊரடங்கு கட்டுப்பாடுகள் காரணமாக, சில்லரை விற்பனை வணிகமும், தொழிலாளர்களும் கடுமையாக பாதிக்கப்பட்டு வருவதாக, இந்திய சில்லரை விற்பனையாளர்கள் சங்கமான, ஆர்.ஏ.ஐ., தெரிவித்துள்ளது.
மேலும் இத்துறைக்கு உடனடியாக அரசின் ஆதரவு தேவை என்றும் கோரிக்கை வைத்து உள்ளது.சங்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நாட்டின் பல பகுதிகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, சில்லரை வணிகங்கள், ஊழியர்களை தக்க வைத்துக் கொள்வது சிரமமாகி உள்ளது. சில்லரை விற்பனையாளர்கள், பணியாளர்களுக்கு ஊதியம் தர வேண்டியிருகிறது.
மேலும் குறைந்தபட்ச மின்சார கட்டணம், வாடகை, சொத்து வரி என பலவிதங்களில் செலவுகளை எதிர்கொள்ள வேண்டியதிருக்கிறது.எனவே, அரசு இரண்டு உதவிகள் செய்ய வேண்டும். இத்துறை பணியாளர்களுக்கு தடுப்பூசி போட வேண்டும். அடுத்து, நிதியுதவிகள் வழங்க வேண்டும்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|