பதிவு செய்த நாள்
13 மே2021
21:24

புதுடில்லி, மே 14-–நாட்டின் நுகர்பொருட்கள் துறை, கடந்த மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டில், 9.4 சதவீதம் வளர்ச்சியை எட்டியுள்ளது.
குறிப்பாக கிராமப்புற பகுதிகளில் இரண்டு இலக்க வளர்ச்சிபெற்றுள்ளது.இத்துறை கிராமப்புறங்களில் சிறப்பாக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது; பெருநகரங்களில் மீட்சியை கண்டு வருகிறது என, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, ‘நீல்சன்’ தெரிவித்துள்ளது.
மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:மார்ச் காலாண்டில் கிராமப்புற சந்தை, 14.6 சதவீத வளர்ச்சியுடன் தொடர்ந்து நன்றாக செயல்பட்டு வருகிறது. பெருநகரங்களை பொறுத்த வரை, இரண்டு காலாண்டுகளுக்கு பின், மார்ச் காலாண்டில் சாதகமான வளர்ச்சியை பெற்றுள்ளது.பாரம்பரியமான வினியோக அமைப்புகளின் வாயிலாக, நுகர்வோர் பொருட்கள் விற்பனை, இரண்டு இலக்க வளர்ச்சியை பெற்றுள்ளது. அதுவே, மின்னணு வர்த்தகங்களின் வளர்ச்சி, ஒற்றை இலக்கத்தில் உள்ளது.
பெருநகரங்களைப் பொறுத்த வரை, மார்ச் காலாண்டில், 2.2 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி எட்டப்பட்டுள்ளது. இதற்கு முந்தைய இரு காலண்டுகளை விட இது அதிகமாகும். இருப்பினும், ஜூன் காலாண்டில் நிலைமை வேறுவிதமாக இருக்ககூடும். தற்போது ஊரடங்குகள் பிறப்பிக்கப்பட்டு வருகின்றன. ‘ஆன்லைன்’ வாயிலாக வர்த்தகங்கள் வளர்ச்சி காணக்கூடும்.
கிராமப் பகுதிகளில் இருக்கும் பெரிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் மீட்சியைப் பெற்று வருவதை காண முடிகிறது. நுகர்வை பொறுத்தவரை, உணவு மற்றும் உணவு அல்லாத பொருட்கள் என இரண்டு பிரிவுமே நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|