பதிவு செய்த நாள்
30 மே2021
19:08

தங்கத்தில் முதலீடு செய்வதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் அதிகரித்து வருவதன் அடையாளமாக, தங்க சேமிப்பு பத்திரங்களின் அண்மை வெளியீட்டில், 5.31 டன் அளவிற்கு பத்திரங்கள் வாங்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த 2016ம் ஆண்டு முதல், தங்க சேமிப்பு பத்திரங்களை அரசு வெளியிட்டு வருகிறது. முதலீடு காலத்தில் வட்டி வருமானம் உள்ளிட்ட சாதகமான அம்சங்களை தங்க பத்திரங்கள் கொண்டுள்ளன.தற்போது, இந்த நிதியாண்டிற்கான புதிய சுற்று பத்திரங்கள் வெளியிடப்பட்டு வருகின்றன. இதில், முதல் சுற்று பத்திரங்களில் முதலீட்டாளர்கள், 2,541 கோடி ரூபாய் முதலீடு செய்து உள்ளதாக தெரிய வந்துள்ளது.
கடந்த நிதியாண்டில் முதலீட்டாளர்கள், 32.3 டன் அளவில் தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்கியுள்ளனர். பத்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்ட ஆண்டு முதல் இதுவரை முதலீடு செய்யப்பட்ட, 63.3 டன்னில் இது 50 சதவீதத்திற்கு மேலானது என்பது குறிப்பிடத்தக்கது.மே மாத சுற்றில், 5.31 டன் அளவிற்கு முதலீடு செய்யப்பட்டுள்ளதை அடுத்து, மொத்த முதலீடு, 68.3 டன்னாக அதிகரித்துள்ளது. தங்க சேமிப்பு பத்திர முதலீட்டில் ஆர்வம் அதிகரித்து வருவதன் அடையாளமாக இது அமைந்துள்ளது.
மேலும் கம்மாடிட்டி செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|