பதிவு செய்த நாள்
08 ஜூலை2021
19:15

புதுடில்லி:மோட்டார் வாகன சில்லரை விற்பனை, ஜூன் மாதத்தில் மீட்சி அடைந்து இருப்பதாக, வாகன முகவர்கள் சங்கமான எப்.ஏ.டி.ஏ., தெரிவித்துள்ளது.
நாட்டிலுள்ள 1,295 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள் வாயிலாக திரட்டப்பட்ட தரவுகளின் படி அறிக்கை வெளியிட்டுள்ள, எப்.ஏ.டி.ஏ., மேலும் தெரிவித்துள்ளதாவது: கடந்த ஜூன் மாதத்தில் பல மாநிலங்களில் ஊரடங்குகள் தளர்த்தப்பட்டன. இதன் காரணமாக வாகன பதிவும் அதிகரித்தது.பயணியர் வாகன பிரிவில் மட்டுமின்றி, வர்த்தக வாகன பிரிவிலும் விற்பனை அதிகரித்துள்ளது. மேலும் டிராக்டர் விற்பனையும் மேம்பட்டுள்ளது.
மக்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்க வசதியாக சொந்த வாகனங்களில் செல்வதையே விரும்புகின்றனர். இதன் காரணமாகவும் தேவை அதிகரித்து வருகிறது. இருசக்கர வாகனங்கள் விற்பனையில் மெதுவான மீட்சி காணப்படுகிறது.
ஒட்டு மொத்தமாக பார்த்தால், கொரோனாவுக்கு முந்தைய 2019ம் ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, இந்த ஜூன் மாதத்தில் விற்பனை மைனஸ் 28 சதவீதமாக உள்ளது. தற்போதைய மீட்சி, ஜூலையிலும் தொடரும் என எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு தெரிவித்து உள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|