பதிவு செய்த நாள்
29 ஜூலை2021
21:03

புதுடில்லி:நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பீட்டை 9 சதவீதத்தில் இருந்து, 9.2 சதவீதமாக, புளும்பெர்க் நிறுவனம் உயர்த்தியுள்ளது.
இது குறித்து இந்நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை:நடப்பு 2021–22ம் நிதியாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி 9 சதவீதமாக இருக்கும் என மதிப்பிடப்பட்டு இருந்தது. பொருளாதார நடவடிக்கைகள் சூடு பிடித்து வருவதால், இந்த மதிப்பீடு, 9.2 சதவீதமாக உயர்த்தப்பட்டுள்ளது. அதுபோல, ஜூலை – செப்., காலாண்டில், மொத்த விலை பணவீக்கம் 10.12 சதவீதத்தில் இருந்து, 10.71 சதவீதமாக இருக்கும் என, மறுமதிப்பீடு செய்யப்பட்டு உள்ளது.
இது, அக்.,– டிச.,ல் 9.13 சதவீதமாக குறையும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தாண்டு சில்லரை பணவீக்கம், ஜூலை – செப்., வரையிலான காலாண்டில், 5.7 சதவீதமாக இருக்கும். இது, அக்., – டிச., காலாண்டுகளில், 5.2 சதவீதமாக குறையும். சில்லரை பணவீக்கத்தை பொறுத்தவரை, ரிசர்வ் வங்கி நிர்ணயித்துள்ள, 2 – 6 சதவீதத்தை தாண்டாது என, பொருளாதார நிபுணர்கள் மதிப்பிட்டுள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|