பதிவு செய்த நாள்
31 ஜூலை2021
20:00

புதுடில்லி:கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், வீடுகள் விற்பனை 58 சதவீதம் சரிவைக் கண்டிருப்பதாக, தரவு பகுப்பாய்வு நிறுவனமான, 'பிராப்ஈக்விட்டி' தெரிவித்துள்ளது.
இது குறித்து மேலும் தெரிவித்துள்ளதாவது:மார்ச் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டுடன் ஒப்பிடும்போது, ஜூன் காலாண்டில், வீடுகள் விற்பனை, 58 சதவீதம் சரிந்துள்ளது.இதற்கு ஏப்ரல், மே மாதங்களில் பரவிய கொரோனா இரண்டாவது அலை முக்கியமான காரணமாக அமைந்தது.ஊரடங்குகள் காரணமாக, நாட்டின் முக்கியமான பல நகரங்களில் வீட்டு பதிவும் தற்காலிகமாக நடைபெற இயலாத சூழல் ஏற்பட்டது.
மேலும், வீட்டுக்கடன் வழங்குவதிலும் தாமதம் ஏற்பட்டது.சென்னையை பொறுத்தவரை, வீடுகள் விற்பனை 59 சதவீதம் சரிவை கண்டது. பெங்களூரு, ஐதராபாத், மும்பை நகரங்களில் 55, 49, 63 சதவீத சரிவு காணப்பட்டது. டில்லி தலைநகர் பிராந்தியத்தில் 62 சதவீத சரிவு ஏற்பட்டுள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|