சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் சேவைகள் துறை ஏற்றுமதி 28 சதவீத வளர்ச்சி காணும் ...  வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு வளர்ச்சி முகத்தில் வேலைவாய்ப்பு ...
வர்த்தகம் » வங்கி மற்றும் நிதி
உங்கள் நிதி இலக்குகளை திட்ட மிடுவது எப்படி?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

08 ஆக
2021
18:55

எல்லாருக்கும் நிதி தேவைகள் இருக்கின்றன. இந்த நிதி தேவைகள் எளிமையாகவும் இருக்கலாம், சிக்கலானதாகவும் இருக்கலாம். நிதி தேவைகள் எப்படி இருந்தாலும், அவற்றை நிறைவேற்றிக்கொள்ள தெளிவான இலக்கு மற்றும் அதற்கான திட்டமிடலும் அவசியம்.


குறிப்பிட்ட காலத்திற்குள் அடைவதற்கான செயல்கள் நிதி இலக்குகளாக கொள்ளப் படுகின்றன. நிதி இலக்குகளை வகுத்துக் கொள்வது, நிதி தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது மற்றும் எதிர்கால நிதி பாதுகாப்பிற்கு வழிவகுக்கும். உங்களுக்கான நிதி இலக்குகளை அமைத்துக் கொள்வதற்கான வழிகள் இதோ:

பல வகை இலக்குகள்:


நிதி இலக்குகள் தனிப்பட்டதாக இருக்கலாம், குடும்பம் சார்ந்ததாக இருக்கலாம். சொந்த வீடு வாங்குவது முதல், சொந்த பைக் வாங்குவது வரை எல்லாமே இலக்குகள் தான். இவற்றில் குறுகிய, நடுத்தர, நீண்ட கால இலக்குகள் உண்டு. இலக்குகள், குறிப்பிட்ட நோக்கம் கொண்டதாகவும், அடையக்கூடிய வகையிலும் இருக்க வேண்டும்.


முதலீடு:


இலக்குகளை தீர்மானித்ததும், அவற்றை அடைவதற்கான முதலீட்டு பாதையை தேர்வு செய்ய வேண்டும். நீண்ட கால இலக்கு எனில், செல்வ வளத்தை உருவாக்கக்கூடிய முதலீட்டை நாட வேண்டும். முதலீட்டின் இடர் தன்மை, வரி விதிப்பு மற்றும் கால அளவையும் பரிசீலிக்க வேண்டும்.


காப்பீடு:


நிதி இலக்குகளை தீர்மானிக்கும் போது, காப்பீடு பாதுகாப்பை மறந்துவிடக் கூடாது. ஒவ்வொருவரும் போதுமான ஆயுள் மற்றும் மருத்துவ காப்பீட்டை பெற்றிருக்க வேண்டும். ஒருவரின் வயது, கடன், சேமிப்பு, நிதி பொறுப்புகள் ஆகியவற்றின் அடிப்படையில் காப்பீடு அளவை தீர்மானிக்க வேண்டும்.


வரி திட்டமிடல்:


நிதி இலக்குகளை அடைய முதலீடு செய்யும் போது, முதலீடுகள் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். முதலீடு சரியான பலனை அளிக்கிறதா என பார்ப்பதோடு, அவற்றின் வரி விதிப்பு அம்சங்களையும் மனதில் கொள்ள வேண்டும். வரி சேமிப்பு அளிக்கும் முதலீடுகள், கூடுதல் பலன் கொடுக்கும்.


ஓய்வு காலம்:


நிதி இலக்குகளில் ஓய்வு காலத்திற்கான இலக்கு நீண்ட கால நோக்கிலானது. இதற்கான திட்டமிடல் மற்றும் முதலீட்டை இயன்றவரை முன்கூட்டியே துவக்குவது நல்லது. ஓய்வு காலத்தில் தேவைப்படக்கூடிய தொகையை கணக்கிட்டு, அதற்கேற்ப இலக்கை தீர்மானித்து செயல்பட வேண்டும்.

Advertisement

மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)