பதிவு செய்த நாள்
18 ஆக2021
20:09

மும்பை:வாகன தயாரிப்பு நிறுவனமான, ‘பியாஜியோ’ உடன் இணைந்து, டி.டபுள்யு.யு., எனும், ‘திரீ வீல்ஸ் யுனைெடட்’ நிறுவனம், மூன்று சக்கர ‘எலக்ட்ரிக்’ வாகன வசதிகளை வழங்க உள்ளது.
பெங்களூரைச் சேர்ந்த டி.டபுள்யு.யு., இலகு ரக மின்சார வாகனங்களுக்கு நிதி உதவி வழங்கும் தொழில்நுட்ப நிறுவனமாகும். இந்நிறுவனம் கூடுதலாக, மூன்று சக்கரபயணியர் வாகனம் மற்றும் சரக்கு வாகனங்களின் ஓட்டுனர்கள், தங்களுடைய பழைய வாகனங்களிலிருந்து மின்சார வாகனங்களுக்கு மாறுவதற்கு தேவையான நிதி சேவைகளை வழங்கும்.
பியாஜியோ நிறுவனம், இவ்வாகனங்களுக்கு தேவையான பராமரிப்பு மற்றும் சேவைகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் அறிமுகமான, ‘பியாஜியோ அபே இ சிட்டி’ மற்றும் ‘அபே இ எக்ஸ்ட்ரா’ ஆகிய மின்சார வாகனங்கள் வாடிக்கையாளர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதாக பியாஜியோ நிறுவனம் தெரிவித்துள்ளது.
புதிய கூட்டணி அமைந்துள்ள நிலையில், முதற்கட்டமாக பழைய வாகனங்களுக்கு பதிலாக, 500 பியாஜியோ வாகனங்களை மாற்றிக் கொடுக்கும் முயற்சியில் இறங்குகிறது டி.டபுள்யு.யு., நிறுவனம்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|