பதிவு செய்த நாள்
18 ஆக2021
20:12

புதுடில்லி:சில்லரை மருந்து விற்பனை நிறுவனமான, ‘மெட்பிளஸ் ஹெல்த் சர்வீசஸ்’ புதிய பங்கு வெளியீட்டுக்கு வருவதற்கான அனுமதி கோரி, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான, ‘செபி’க்கு விண்ணப்பித்து உள்ளது.
மெட்பிளஸ் நிறுவனம், பங்கு வெளியீட்டின் வாயிலாக 1,639 கோடி ரூபாய் திரட்ட திட்டமிட்டு உள்ளதாக விண்ணப்பத்தில் தெரிவித்துள்ளது.இந்த பங்கு வெளியீட்டின் போது, 600 கோடி ரூபாய்க்கு புதிய பங்குகளும், மீதி தொகைக்கு நிறுவனர்கள் மற்றும் பங்குதாரர்கள் வசம் இருக்கும் பங்குகளும் விற்பனை செய்யப்பட உள்ளன.
மேலும், குறிப்பிட்ட அளவிலான பங்குகள், நிறுவனத்தின் பணிபுரியும் தகுதி வாய்ந்த ஊழியர்களுக்காக ஒதுக்கப்பட இருக்கின்றன.பங்கு வெளியீட்டின் வாயிலாக திரட்டப்படும் நிதி, மெட்பிளஸ் துணை நிறுவனமான, ‘ஆப்டிவல்’ நிறுவனத்தின் நடைமுறை மூலதன தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்ள திட்டமிடப்பட்டு உள்ளது.
மெட்பிளஸ் கடந்த 2006ம் ஆண்டில் துவங்கப்பட்டது. இது, ஐதராபாதை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாகும். இந்நிறுவனத்துக்கு நாடெங்கிலும் 2,000த்துக்கும் மேற்பட்ட மருந்தகங்கள் உள்ளன.
மேலும் பங்கு வர்த்தகம் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|