பதிவு செய்த நாள்
02 செப்2021
20:09

இந்தியாவின் முன்னணி எண்ட்-டு-எண்ட் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமான டெல்லிவெரி, பெங்களூரை மையமாக் கொண்ட ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தைக் கைப்பற்றியுள்ளதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின் மூலம் பி2பி திறன்களை மேலும் வலுப்படுத்தியுள்ளது டெல்லிவெரி.
இதுகுறித்து, டெல்லிவெரி நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சாஹில் பாருவா பேசும்போது, “ கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக டெல்லிவெரி ஆனது பி 2 சி லாஜிஸ்டிக்ஸ் பணியை மேற்கொண்டுவருகிறது. தற்பொழுது, இதில் ஒரு முன்னணி நிலையை நிலைநாட்டியுள்ளது. மேலும், எங்கள் பகுதி டிரக்லோட் வியாபாரத்தை ஸ்பாட்டனுடன் இணைப்பதன் மூலம் நாங்கள் பி 2 பி எக்ஸ்பிரஸிலும் முன்னிலை நிலைக்குச் செல்வோம் என்பதில் மாற்றமில்லை. மிக முக்கியமாக, எங்கள் பி 2 சி மற்றும் பி 2 பி எக்ஸ்பிரஸ் வணிகங்களுக்கிடையேயான ஒருங்கிணைப்பு நன்மைகளை டெல்லிவெரி மற்றும் ஸ்பாட்டன் என இரண்டு நிறுவனத்தின் வாடிக்கையாளர்களுக்கும் வழங்குவதில் நாங்கள் பெருமைக் கொள்கிறோம். மேலும் எண்ட்-டு-எண்ட் சப்ளை சங்கிலித் திறன்களை மேலும் மேம்படுத்துவதில் மகிழ்ச்சிக் கொள்கிறோம்” என்றார்.
ஸ்பாட்டன் லாஜிஸ்டிக்ஸ் நிர்வாக இயக்குனர் அபிக் மித்ரா கூறுகையில், "டெல்லிவெரியின் வளர்ச்சி மற்றும் மதிப்பு உருவாக்கத்தின் பயணத்தில் ஒரு பகுதியாக நானும் , ஸ்பாட்டன் குழுவும் இடம் பெறுவதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறோம். இந்தியாவில் லாஜிஸ்டிக்ஸ் மற்றும் விநியோகச் சங்கிலி சேவை நிறுவனமாக ஒரு முன்னணி முடிவை உருவாக்கும் பணியில் டெல்லிவெரி அணி சிறப்பாக செயல்பட்டுள்ளது. ஸ்பாட்டன் ஆனது வாடிக்கையாளர்களின் உறவுகள் மற்றும் சேவை தரம், தொழில்முறை மேலாண்மை மற்றும் தொழில்நுட்பம் மற்றும் பொறியியல் ஆகியவற்றில் மிகுந்த கவனம் செலுத்தி வருகிறது. அந்த நன்மைகள் தற்பொழுது டெல்லிவெரி நிறுவனத்துடன் பகிரப்படுகிறது. இரண்டு நிறுவனங்களும் இணைவதால் இந்தியாவின் முன்னணி லாஜிஸ்டிக்ஸ் நிறுவனங்களில் ஒன்றாக இடம்பெறும் என்பதில் சந்தேகமில்லை” என்றார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|