ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ஸ்பாட்டன் நிறுவனத்தைக் கைப்பற்றிய டெல்லிவெரி லாஜிஸ்டிக் ...  ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ஆகஸ்ட் மாதத்தில் ஏற்றுமதி 45 சதவீதம் அதிகரிப்பு ...
பொருளாதாரம் மீட்சி அடைந்தாலும் வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 செப்
2021
20:22

புதுடெல்லி:கடந்த ஆகஸ்ட் மாதத்தில், நாட்டில் வேலையின்மை விகிதம் 8.32 சதவீதமாக உயர்ந்துள்ளது. ஜூலை மாதத்தில் முன்னேற்றம் ஏற்பட்ட நிலையில், ஆகஸ்டில் பின்னடைவு ஏற்பட்டுள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையமான சி.எம்.ஐ.இ., தெரிவித்து உள்ளது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:கடந்த ஜூலை மாதத்தில் வேலையின்மை விகிதம் 6.95 சதவீதமாக இருந்த நிலையில், ஆகஸ்ட் மாதத்தில் 8.32 சதவீதமாக அதிகரித்து உள்ளது. மதிப்பீட்டு மாதத்தில், நகர்ப்புற வேலையின்மை கிட்டத்தட்ட 10 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், 10 லட்சம் பேர் ஆகஸ்ட் மாதத்தில் வேலையிழப்புக்கு ஆளாகி இருக்கின்றனர். இருப்பினும், ஏப்ரல் மாதத்துடன் ஒப்பிடும்போது இது மிகவும் குறைவு தான். கடந்த ஏப்ரல் மாதத்தில் 70 லட்சம் பேர் வேலைஇழப்புக்கு ஆளாகினர்.

வேலைவாய்ப்புக்கான சூழல், கடந்த சில ஆண்டுகளாகவே கடினமானதாக இருந்து வருகிறது. இதில் கொரோனா தாக்கம் கூடுதல் பாதிப்புகளை ஏற்படுத்தி உள்ளது.நாட்டின் பொருளாதாரம் மெதுவாக மீட்சியடைந்து வழக்கமான நிலையை அடைந்து கொண்டிருக்கும் நிலையில், வேலைவாய்ப்புக்கான சந்தை தள்ளாடி வருகிறது.நாட்டில் ஹரியானா, ராஜஸ்தான் ஆகிய இரு மாநிலங்களில், வேலைவாய்ப்பின்மை விகிதம் இரட்டை இலக்க அளவில் உள்ளது.இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)