பதிவு செய்த நாள்
02 செப்2021
20:24

புதுடில்லி:வீடுகளின் விற்பனையானது, நடப்பு நிதிஆண்டின் முதல் காலாண்டில் கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இரு மடங்கு அதிகரித்துள்ளதாக, தர நிர்ணய நிறுவனமான, ‘இக்ரா’ தெரிவித்து உள்ளது.
எதிர்பார்ப்பு
நாட்டில் உள்ள முக்கியமான 8 நகரங்களில் வீடுகளின் விற்பனை, ஜூன் மாதத்துடன் முடிவடைந்த முதல் காலாண்டில் அதிகரித்துள்ளது. இருப்பினும், இதற்கு முந்தைய காலாண்டைவிட 19 சதவீதம் சரிவைக் கண்டுள்ளது.
இது குறித்து, இக்ரா மேலும் தெரிவித்துள்ளதாவது:தடுப்பூசிகள் செலுத்துவதில் அரசு காட்டும் முனைப்பு மற்றும் பொருளாதாரம் மீட்சியடைந்து வருவது ஆகியவை காரணமாக, வீடுகள் விற்பனை குறைந்த கால அளவில் பழைய நிலையை எட்டும் என எதிர்பார்க்கலாம்.
பண்டிகை காலம்
மேலும், வீடுகளுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக, வீட்டுக் கடனுக்கான வட்டி விகிதம் குறைவாக இருப்பது மற்றும் வீட்டிலிருந்தே வேலை செய்வதால் சற்று கூடுதல் இடம் தேவைப்படுவது ஆகியவற்றால் வீடுகளுக்கான தேவை அதிகரித்து உள்ளது. குறிப்பாக, தகவல் தொழில்நுட்பத் துறையினரால் தேவை அதிகரித்துள்ளது.
பலர் ஏற்கனவே சொந்த வீடு வைத்திருப்பினும், வீட்டிலிருந்து பணியாற்ற கூடுதல் இடத் தேவை காரணமாக, இரண்டாவதாக ஒரு பெரிய வீட்டை வாங்கும் முயற்சியில் இறங்கி உள்ளனர்.பண்டிகை காலத்தை ஒட்டி, வீடுகளுக்கான தேவை மேலும் அதிகரிக்க கூடும். மேலும், அடுத்து வரும் கொரோனா அலைகளால் ஏற்படும் பாதிப்புகளும் குறைவாகவே இருக்க வாய்ப்புகள் இருப்பதாக இக்ரா தெரிவித்து உள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|