பதிவு செய்த நாள்
03 செப்2021
19:33

புதுடில்லி:நாட்டின் மிகப் பெரிய வாகன தயாரிப்பு நிறுவன மான, ‘மாருதி சுசூகி’ அதன் 1.82 லட்சம் வாகனங்களை திரும்ப பெற்று, பழுதான பாகத்தை மாற்றித் தருவதாக அறிவித்து உள்ளது.
மாருதி சுசூகி நிறுவனம் அதன், ‘சியாஸ், விட்டாரா பிரெஸ்ஸா, எஸ்.கிராஸ்’ உள்ளிட்ட பல்வேறு வகையான வாகனங்களில் உள்ள, ‘ஜெனரேட்டர் யூனிட்’டில் பழுது இருப்பதால், அவற்றை திரும்ப பெறுவதாக அறிவித்துள்ளது.
வாடிக்கையாளர்கள் நலனில் அக்கறை கொண்டு, வாகனங்களில் குறிப்பிட்ட பழுதை கண்டறிந்து, அவற்றை கட்டணம் எதுவும் பெறாமல், இலவசமாகவே சரி செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளது.சம்பந்தப்பட்ட வாகன உரிமையாளர்களை, மாருதி சேவை மையங்களிலிருந்து தொடர்பு கொண்டு, வாகனங்கள் பெறப்படும்.
பழுதான பாகத்தை மாற்றித் தரும் இந்த பணி, நவம்பர் மாதம் முதல் வாரத்திலிருந்து துவங்குகிறது.அதுவரை வாடிக்கையாளர்கள், தண்ணீர் அதிகம் தேங்கி இருக்கும் பகுதிகளுக்கு வாகனத்தில் செல்ல வேண்டாம் என்றும்; எலக்ட்ரிக் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களில் நேரடியாக தண்ணீரை பீய்ச்சியடிப்பதை தவிர்க்குமாறும் நிறுவனம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|