பதிவு செய்த நாள்
07 செப்2021
19:40

புதுடில்லி:மத்திய அரசு, 7ஆயிரத்து 900 கோடி ரூபாய் தந்தால், அமெரிக்கா, பிரான்ஸ் உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்குவது தொடர்பான வழக்குகளை வாபஸ் வாங்குவதாக, ‘கெய்ர்ன் எனர்ஜி’ நிறுவனம் அறிவித்து உள்ளது.
பிரிட்டனைச் சேர்ந்த, கெய்ர்ன் எனர்ஜி நிறுவனம், மூலதன வரி செலுத்த தவறியதாக கூறி, 7 ஆயிரத்து 900 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகள், டிவிடெண்டு உள்ளிட்டவற்றை, வருமான வரித் துறை முடக்கியது.
இதை எதிர்த்து, கெய்ர்ன் எனர்ஜி சர்வதேச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்து, சாதகமான தீர்ப்பைப் பெற்றது. அத்துடன், நிலுவைத் தொகைக்காக, பிரான்ஸ், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில், இந்திய சொத்துக்களை முடக்க, கெய்ர்ன் எனர்ஜி வழக்கு தொடர்ந்துள்ளது.
இந்நிலையில், கடந்த மாதம் இந்த பிரச்னைக்கு காரணமான முன்தேதியிட்ட வருமான வரி வசூல் சட்டத்தை மத்திய அரசு ரத்து செய்தது.அத்துடன், கெய்ர்ன் உள்ளிட்ட நிறுவனங்களிடம் வசூலித்த 8,100 கோடி ரூபாயை திரும்பத் தரும் விதிமுறைகளுடன், புதிய சட்ட திருத்தத்தை அறிமுகப்படுத்தியது.
இந்நிலையில், கெய்ர்ன் எனர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சைபன் தாம்சன் கூறும்போது, ‘‘நிறுவனத்திடம் பிடித்தம் செய்த, 7 ஆயிரத்து, 900 கோடி ரூபாயை திரும்பத் தந்த ஓரிரு நாட்களில், மத்திய அரசுக்கு எதிராக தொடர்ந்த அனைத்து வழக்குகளையும் வாபஸ் வாங்கி விடுவோம்,’’ என, தெரிவித்துள்ளார். இதனால், விரைவில் இப்பிரச்னை முடிவுக்கு வரும் என, தெரிகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|