பதிவு செய்த நாள்
07 செப்2021
19:50

புதுடில்லி:கடந்த ஆகஸ்டில் பயணியர் வாகன விற்பனை 37 சதவீதம் உயர்ந்து, 2 லட்சத்து 53 ஆயிரத்து 363 ஆக அதிகரித்துள்ளது.
இது குறித்து, வாகன முகவர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:கடந்த ஆகஸ்டில் பயணியர் வாகன விற்பனை 2 லட்சத்து 53 ஆயிரத்து 363 ஆக உயர்ந்துள்ளது. இது, 2020 ஆகஸ்டில் 1 லட்சத்து 82 ஆயிரத்து 651ஆக இருந்தது. இதே காலத்தில், இருசக்கர வாகன விற்பனை 7 சதவீதம் உயர்ந்து, 9 லட்சத்து 15ஆயிரத்து 126லிருந்து, 9 லட்சத்து 76 ஆயிரத்து 51 ஆக ஏற்றம் கண்டுள்ளது.
மூன்று சக்கர வாகன விற்பனை 80 சதவீதம் அதிகரித்து, 16 ஆயிரத்து 923லிருந்து, 30 ஆயிரத்து 410 ஆக உயர்ந்துள்ளது. வர்த்தக வாகன விற்பனை 98 சதவீதம் அதிகரித்து, 26ஆயிரத்து 851லிருந்து, 53ஆயிரத்து 150 ஆக ஏற்றம் அடைந்துள்ளது. ஆகஸ்டில், ஒட்டுமொத்த வாகன விற்பனை 14 சதவீதம் உயர்ந்து, 12 லட்சத்து 9 ஆயிரத்து 550லிருந்து, 13 லட்சத்து 84ஆயிரத்து 711ஆக அதிகரித்துள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
வாகனத்திற்கான ‘செமி கண்டக்டர்’களுக்கு பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால் தயாரிப்பு குறைந்து, வரும் பண்டிகை காலத்தில் விற்பனை குறையக்கூடும் என, வாகன முகவர்கள் கூட்டமைப்பு கவலை தெரிவித்துள்ளது.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|