பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் பொருளாதார வளர்ச்சி 10.5 சதவீதம் ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
வர்த்தக துளிகள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

22 அக்
2021
21:59

முதலீட்டு ஆலோசகர்களுக்கு தடை

மெய்நிகர் நாணயங்கள், என்.எப்.டி., டிஜிட்டல் தங்கம் போன்ற புதிய வகை முதலீடுகள் குறித்து, பதிவு செய்யப்பட்ட முதலீட்டு ஆலோசகர்கள், அதிகாரப்பூர்வ ஆலோசனைகள் வழங்குவதற்கு, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’ தடைவிதித்து அறிவித்துள்ளது.முறைப்படுத்தப்படாத இப்பிரிவுகளில், முதலீட்டு ஆலோசகர்கள் திறம்பட ஆலோசனைகளை வழங்க இயலாது என, செபி கருதியதன் அடிப்படையில் இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

‘ரிலையன்ஸ்’ முடிவுக்கு ஆதரவு‘

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ்’ நிறுவனத்தின் நிர்வாக குழுவில், செயல்சார் இயக்குனராக, சவுதி ‘அராம்கோ’ நிறுவனத்தின் தலைவர் யஸிர் அல்ருமாயனை நியமிப்பதற்கு, பங்குதாரர்கள் அனுமதி வழங்கி உள்ளனர். யஸிர் அல்ருமாயனை, ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிர்வாக குழுவில் சேர்க்கும் திட்டத்துக்கு எதிராக 2 சதவீத வாக்குகளே பதிவானது குறிப்பிடத்தக்கது.

‘இன்வெஸ்ட் இந்தியா’ தேர்வு

2021- – 2023ம் ஆண்டிற்கான, உலக முதலீட்டு ஊக்குவிப்பு நிறுவனங்களின் கூட்டமைப்பினுடைய தலைமை பொறுப்புக்கு, ‘இன்வெஸ்ட் இந்தியா’ ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக, அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.இந்தியாவில், முதலீட்டு வாய்ப்புகள் மற்றும் தேர்வுகள் சம்பந்தமாக, முதலீட்டாளர்களுக்கு உதவும் வகையில் செயல்பட்டு வரும் அமைப்பே இன்வெஸ்ட் இந்தியா.

வங்கிகளில் கடன் வளர்ச்சி உயர்வு

அக்டோபர் 8ம் தேதியுடன் முடிவடைந்த இரு வாரங்களில், வங்கிகளின் கடன் வளர்ச்சி 6.48 சதவீதம் உயர்ந்து, 110.13 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, ரிசர்வ் வங்கி தரவுகள் தெரிவிக்கின்றன.மேலும் இக்காலகட்டத்தில், வங்கிகளின் டிபாசிட் 10.16 சதவீதம் அதிகரித்து, 157.56 லட்சம் கோடி ரூபாயாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

‘பியூச்சர்’ குழுமத்துக்கு பிரச்னை‘

ரிலையன்ஸ் ரீடெய்ல்’ நிறுவனம், ‘பியூச்சர்’ குழுமத்தின் சில்லரை வணிகத்தை, 24 ஆயிரத்து 713 கோடி ரூபாய்க்கு வாங்கும் ஒப்பந்தத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க, சிங்கப்பூர் சர்வதேச நடுவர் மன்றம் மறுத்துவிட்டது.ரிலையன்ஸ் ரீடெய்ல் மற்றும் பியூச்சர் குழுமத்துக்கு இடையேயான இந்த ஒப்பந்தத்துக்கு தடை விதிக்குமாறு, ‘அமேசான்’ நிறுவனம், சிங்கப்பூர் நடுவர் மன்றத்திடம் முறையிட்டது. இதைஅடுத்து ஒப்பந்தத்துக்கு தடை விதிக்கப்பட்டது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)