ஆட்டம் காட்டிய சந்தை ஆட்டம் காட்டிய சந்தை ...  அதானி குழுமத்தின் புதிய முதலீடு அதானி குழுமத்தின் புதிய முதலீடு ...
தியேட்டர் அனுபவத்தை தரும் ‘பிலிப்ஸ்’ ஆண்ட்ராய்டு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

29 அக்
2021
22:42

சென்னை:‘டால்பி விஷன், டால்பி அட்மோஸ்’ வசதிகளை உள்ளடக்கிய ‘பிலிப்ஸ் 4 கே யு.எச்.டி., – எல்.இ.டி., ஆண்ட்ராய்டு டிவி’கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதன் வாயிலாக, டி.பி.வி.டெக்னாலஜி நிறுவனம், ‘ஸ்மார்ட் டிவி’ பிரிவை வலுப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தியாவில், ‘டிவி’ விற்பனை சிறப்பான முறையில் அதிகரித்து வருகிறது. கொரோனா தொற்றுக்கு பின், பொருளாதாரம் முன்னேற்ற பாதையில் செல்வதை அடுத்து, நடப்பு நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில், ‘டிவி’ விற்பனை 46 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது.

ஒட்டுமொத்த ‘டிவி’ சந்தையில், ‘ஸ்மார்ட் டிவி’யின் பங்கு 80 சதவீதமாக உள்ளது. இதனால், ‘டிவி’ தயாரிப்பு நிறுவனங்கள், ‘ஸ்மார்ட் டிவி’களை அதிகம் தயாரித்து வருகின்றன.இதைத் தொடர்ந்து, டி.பி.வி., டெக்னாலஜி நிறுவனம், ‘டால்பி விஷன், டால்பி ஆட்மோஸ்’ கொண்ட பிலிப்சின் 4 கே யு.எச்.டி., – எல்.இ.டி., ஆண்ட்ராய்டு ‘டிவி’களை அறிமுகம் செய்துள்ளது.

பிலிப்ஸ் –- 8100 ‘டிவி’ சீரிஸ்கள், 55, 50, 43 திரை அளவுகளில் கிடைக்கின்றன. அவற்றின் விலை முறையே 89 ஆயிரத்து 990 ரூபாய்; 79 ஆயிரத்து 990 ரூபாய்; 59 ஆயிரத்து 990 ரூபாயாக உள்ளன.

இது குறித்து, டி.பி.வி., டெக்னாலஜி இந்தியா தலைவர் ஷைலேஷ் பிரபு கூறியதாவது: புதுமைகளை வழங்கும் பிலிப்ஸ் ‘டிவி’யில் உள்ள, ‘ஆண்ட்ராய்டு 10 ஓ.எஸ்., டால்பி விஷன், டால்பி அட்மோஸ்’ போன்ற அம்சங்கள், வாடிக்கையாளர்களுக்கு தியேட்டர் அனுபவத்தை வீட்டிற்கு கொண்டு வரும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)