பதிவு செய்த நாள்
17 நவ2021
19:10

புதுடில்லி:நாட்டின் பொருளாதார வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக இருக்கும் என, பிரதம மந்திரிக்கான பொருளாதார ஆலோசனை குழுவின் தலைவர் பிபேக் தீப்ராய் கூறியுள்ளார்.
இது குறித்து, அவர் மேலும் கூறியுள்ளதாவது:நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி, நடப்பு நிதியாண்டில் 10 சதவீதமாக வளர்ச்சி காணும் என எதிர்பார்க்கிறேன்.அதிக வளர்ச்சிக்கான பாதை, அதிக வறுமை ஒழிப்பு, அதிக வேலைவாய்ப்பு போன்றவை காரணமாக, சிறப்பாக நிர்வகிக்கப்படும் இந்தியாவை நோக்கிய பாதையில் நாம் செல்கிறோம் என நம்புகிறேன்.
இந்த ஆண்டு உண்மையான வளர்ச்சி விகிதம், கிட்டத்தட்ட 10 சதவீதமாக இருக்கும். இந்த நிதியாண்டின் துவக்கத்தில் இது 8.5 – 12.5 சதவீதமாக இருக்க கூடும் என கணிப்புகள் இருந்தன.
எவ்வாறாயினும், ஜி.எஸ்.டி., வருவாய், வாகன பதிவு, அன்னிய நேரடி முதலீடு, உருக்கு உபயோகம் போன்றவை அதிகரித்துள்ளதை அடுத்து, வளர்ச்சி 10 சதவீதமாக இருக்கும் என எதிர்பார்க்கலாம். அடுத்த நிதியாண்டில் நாட்டின் வளர்ச்சி 6 -– 7.5 சதவீதமாக இருக்கும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|