பதிவு செய்த நாள்
17 நவ2021
20:22

புதுடில்லி:நடப்பு ஆண்டில், வீடுகள் விற்பனை 15-- -– 20 சதவீதம் அளவுக்கு அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக, சொத்து ஆலோசனை நிறுவனமான ‘பிராப்டைகர்’ தெரிவித்துள்ளது.
இது குறித்து, இந்நிறுவனம் மேலும் தெரிவித்துள்ளதாவது:நடப்பு ஆண்டில், முக்கியமான 8 நகரங்களில், வீடுகள் விற்பனை 15 – 20 சதவீதம் அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். தேவைகள் அதிகரித்து வருவது, வீட்டுக் கடனுக்கான வட்டி குறைந்துள்ளது ஆகியவை காரணமாக விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.க
டந்த, 2020ம் ஆண்டில், வீடுகள் விற்பனை 47 சதவீதம் குறைந்து போனது. இதற்கு முக்கியமான காரணம், கொரோனா தொற்று காரணமாக பொதுமுடக்கம் அறிவிக்கப்பட்டது தான்.கடந்த ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், வீடுகள் விற்பனை 12 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.
தேவை அதிகரிப்பு, வீட்டுக் கடன் வட்டி குறைவு ஆகியவற்றுடன், பொருளாதார மீட்சி ஏற்பட்டு வருவது, இதன் காரணமாக வேலைவாய்ப்புகள் அதிகரிப்பது, பண்டிகை கால விற்பனை போன்றவற்றால், நடப்பு ஆண்டில் வீடுகள் விற்பனை 15_ 20 சதவீதம் அதிகரிக்கும். இவ்வாறு தெரிவித்துள்ளது.
மேலும் ரியல் எஸ்டேட் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|