வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  ‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு ‘ஆன்லைனில்’ மருந்து வணிகம் அப்பல்லோ – அமேசான் பேச்சு ...
தங்க சேமிப்பு பத்திரம் நாளை வெளியீடு ஒரு கிராம் 4,791 ரூபாயாக நிர்ணயம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 நவ
2021
20:35

புதுடில்லி:நடப்பு நிதியாண்டுக்கான, மத்திய அரசின் எட்டாம் கட்ட தங்க சேமிப்பு பத்திர வெளியீடு, நாளை துவங்குகிறது. இந்த எட்டாம் கட்ட வெளியீட்டில், தங்கத்தின் விலை, 1 கிராமுக்கு, 4,791 ரூபாய் என, நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக, ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
இந்த எட்டாம் கட்ட தங்க பத்திர வெளியீடு, நாளை துவங்கி, டிசம்பர் 3ம் தேதியுடன் முடிவடைகிறது.பத்திர வெளியீட்டுக்கு முந்தைய மூன்று வர்த்தக தினங்களில் இருந்த, 999 சுத்தமான தங்கத்தின் விலையின் சராசரியைக் கொண்டு, வெளியீட்டு விலை நிர்ணயிக்கப்படுகிறது.
அந்த வகையில், நாளை நடைபெறும் பத்திர வெளியீட்டின் போது, தங்கத்தின் விலை, 4,791 ரூபாய் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வலைதளம் அல்லது மின்னணு முறையில் மேற்கொள்ளும் முதலீடுகளுக்கு, 1 கிராமுக்கு, 50 ரூபாய் தள்ளுபடி வழங்கப்படும் என, மத்திய நிதியமைச்சகம் தெரிவித்து உள்ளது.
இதனால், ‘கிரெடிட், டெபிட்’ கார்டு உள்ளிட்ட மின்னணு பணப் பரிவர்த்தனையில், தங்க சேமிப்பு பத்திரங்களை வாங்குவோருக்கு, 1 கிராம், 4,741 ரூபாய்க்கு கிடைக்கும்.வங்கிகள், ஸ்டாக் ஹோல்டிங் கார்ப்பரேஷன், மும்பை மற்றும் தேசிய பங்குச் சந்தைகள், தலைமை அஞ்சலகங்கள் ஆகியவற்றில், தங்க சேமிப்பு பத்திரங்கள் விற்பனை செய்யப்படும்.
மத்திய அரசு, தங்கத்தின் இறக்குமதியை குறைக்கும் நடவடிக்கையில் ஒன்றாக, 2015 நவம்பரில், தங்க சேமிப்பு பத்திர திட்டத்தை அறிவித்தது. இதில், தங்கத்தை ஆவண வடிவில் சேமிக்கலாம். 1 கிராம் தங்கம், 1 யூனிட் என்ற கணக்கில் வழங்கப்படும்.கடந்த ஏழாவது தங்க பத்திர வெளியீட்டின்போது, விலை 1 கிராமுக்கு 4,761 ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த திட்டத்தில், குறைந்தபட்சமாக, 1 கிராம் என்ற அளவில் முதலீடு செய்ய முடியும். அதிகபட்சமாக, தனிநபர்கள் 4 கிலோ வரையும், அறக்கட்டளை போன்றவை 20 கிலோ வரையும் முதலீடு செய்யலாம்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
கோவிட் தொற்று பாதிப்புக்கு உள்ளானவர்கள் புதிய பாலிசி பெற, மூன்று மாதம் காத்திருப்பு காலத்திற்கு உள்ளாக ... மேலும்
business news
மும்பை:கடந்த ஆண்டில், பங்கு சார்ந்த பண்டுகளில், சாதனை அளவாக 37.73 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு முதலீடுகள் ... மேலும்
business news
திருப்பூர்:கடந்த ஏப்., – டிச., வரையிலான ஒன்பது மாதங்களில், இந்தியாவில் இருந்து 82 ஆயிரத்து, 653 கோடி ரூபாய் ... மேலும்
business news
புதுடில்லி:இந்திய ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், கடந்த ஆண்டில் மட்டும் 3.11 லட்சம் கோடி ரூபாயை திரட்டி உள்ளன. ... மேலும்
business news
புதுடில்லி:கொரோனா தொற்று அதிகரித்துள்ள நிலையிலும், இந்திய பொருளாதாரம் குறித்து, இந்திய வணிகங்கள் அதிக ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)