ஆயிரம் சந்தேகங்கள்: இல்லத்தரசியான நான் வரி கட்டவேண்டுமா?ஆயிரம் சந்தேகங்கள்: இல்லத்தரசியான நான் வரி கட்டவேண்டுமா? ...  சில்லரை விற்பனை நவம்பரில் அதிகரிப்பு சில்லரை விற்பனை நவம்பரில் அதிகரிப்பு ...
கேமரா கண்காட்சிகள் மூலம் வாடிக்கையாளார்களை கவரும் கேனான்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 டிச
2021
16:21

உயர்தர வாடிக்கையாளர் அனுபவத்தை வழங்குதல் மற்றும் பல்வகைக் கேமரா மற்றும் லென்ஸ்களைக் காட்சிப்படுத்தும் முனைவுகளுக்காகக் கேனன் நிறுவனம் ‘கேப்சர் – தி ஹார்ட் ஆப் ஆக்ஷன்’ என்னும் நிகழ்ச்சியை கோவையில் நடத்தியது. இதற்கு முன்பு ஐதராபாத் மற்றும் கொச்சியில் கேனன் இதே நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடித்தது. நேரடி அனுபவத்தைப் பெறும் வகையில் பிரத்யேகமாக நடைபெற்ற நிகழ்ச்சியில் கேனன் நிறுவனத்தின் மிரர்லெஸ் கேமராக்கள், சினிமா கேமராக்கள், ஆர்எஃப் லென்ஸ்கள் மற்றும் சமீபத்திய அறிமுகமான இஓஎஸ் ஆர்3 கேமராக்கள் மற்றும் புரட்சிகரமான வெர்சுவல் ரியாலிடி லென்ஸ்கள் ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டன. பிரபல நிழற்படக் கலைஞர்களான ஜான் எட்வர்ட்ஸ் மற்றும் தனபாலன் ஆறுமுகம் ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.

இந்த கண்காட்சி குறித்து, கேனன் இந்தியா, நுகர்வோர் சிஸ்டம் பொருள்கள் & இமேஜிங்க் கம்யூனிகேஷன் பிசினஸ் இயக்குனர் சி.சுகுமாரன் கூறுகையில் ‘கடந்த பல ஆண்டுகளாக நிழற்படத் துறையில் சமீபத்திய தொழில்நுட்பக் கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்துவதில் கேனன் பெருமிதம் கொள்கிறது. தெற்குச் சந்தையிலுள்ள வாடிக்கையாளர்களிடமிருந்து எங்களுக்கு அபரிமித வரவேற்பு கிடைத்து வருகிறது. அவர்களின் வளரும் தேவைகளை நிறைவு செய்ய ‘கேப்சர்’ நிகழ்ச்சியைத் தொடங்கினோம். இத்தொடர் நிகழ்ச்சிகள் மூலம், பல்வேறு துறைகளுக்கான எங்களது மிரர்லெஸ் பொருள்களைக் காட்சிப்படுத்துவதுடன், உண்மையான வாழ்க்கைச் சூழலமைவில் அப்பொருள்களை அனுபவிக்கவும் வாய்ப்பையும் வாடிக்கையாளர்களுக்கு வழங்குகிறோம். கூடுதலாக, வி ஆர் மண்டலங்களில் எங்களது ஆர்எஃப்5.2 எம்எம், எஃப்2.8 எல் ட்யூயல் வெர்சுவல் ரியாலிடி லென்ஸ்களை அறிமுகப்படுத்துவதிலும் மகிழ்ச்சி அடைகிறோம். இதன் மூலம் முன்னெப்போதும் இல்லாத சிறப்பான அனுபவங்களை வழங்கவும் காத்திருக்கிறோம்’ என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)