பதிவு செய்த நாள்
29 டிச2021
22:17

புதுடில்லி:மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பட்ஜெட்டுக்கு முந்தையை ஆலோசனை கூட்டத்தை, மாநில நிதியமைச்சர்களுடன் இன்று நடத்த இருக்கிறார்.
இந்த மாதத்தில் நடைபெற்ற மற்ற கூட்டங்களை போல அல்லாமல், இந்த கூட்டம், நேரடியாக அனைவரும் பங்கேற்று நடைபெற இருக்கிறது.இந்த கூட்டம், டில்லியில் உள்ள விக்ஞான் பவனில் இன்று நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.அடுத்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், பிப்ரவரி முதல் தேதியன்று தாக்கல் செய்ய உள்ளார்.
ஏற்கனவே தொழில் துறையினர், நிதி துறையினர், ஊழியர் சங்கங்கள், விவசாய பிரதிநிதிகள் என பல்வேறு தரப்பினருடன், பட்ஜெட் குறித்த ஆலோசனை கூட்டத்தை நிதியமைச்சர் நடத்தி உள்ளார். இந்த கூட்டங்கள் இம்மாதம் 15ம் தேதியிலிருந்து, 22ம் தேதி வரையிலான காலத்தில், பல கட்டங்களாக நடைபெற்றன.
இதுவரை, 8 கூட்டங்களில் மொத்தம் 120 அழைப்பாளர்கள், பல்வேறு தரப்பிலிருந்து பங்கேற்று, தங்கள் ஆலோசனைகளை வழங்கி உள்ளனர். அடுத்தகட்டமாக, மாநில நிதியமைச்சர்களுடனான ஆலோசனை கூட்டத்தை நிதியமைச்சர் இன்று நடத்த உள்ளார்.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|