பதிவு செய்த நாள்
30 டிச2021
19:41

புதுடில்லி:நாட்டின் மிகப்பெரிய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி., அதன் பாலிசிகளை ஆன்லைனில் விற்பனை செய்ய ஏதுவாக, ‘டிஜி ஸோன்’ எனும் இணைய வசதியை துவக்கி உள்ளது.
எல்.ஐ.சி., நிறுவனத்தை முற்றிலும் டிஜிட்டல்மயமாக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, இந்த ஆன்லைன் டிஜி ஸோன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.விரைவில் புதிய பங்கு வெளியீட்டுக்கு வர இருக்கும் எல்.ஐ.சி., அண்மைக்காலமாக தொழில்நுட்ப வசதிகளை அதிகரிக்கும் நோக்கத்துடன் இத்தகைய முயற்சிகளை எடுத்து வருகிறது.
இந்த டிஜி ஸோன் வாயிலாக, வாடிக்கையாளர்கள் ஆன்லைனில் பாலிசிகளை வாங்குவது, பிரீமியத்துக்கான கட்டணங்களை செலுத்துவது உள்ளிட்ட பல சேவைகளை பெறலாம் என எல்.ஐ.சி., தெரிவித்துள்ளது.இதற்கிடையே, இந்நிறுவனம் டிஜிட்டல்மயமாவதற்கு உதவியாக, ஆலோசனை சேவை நிறுவனம் ஒன்றை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டு உள்ளது.
இதற்காக, விருப்ப கேட்பு விண்ணப்பங்களை கேட்டுள்ளது. விண்ணப்பங்களை அனுப்புவதற்கு கடைசி தேதி, ஜனவரி 17 என்றும் எல்.ஐ.சி., தெரிவித்து உள்ளது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|