ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 6 மாதங்களாக தொடர் சாதனை ஜி.எஸ்.டி., வசூல் வருவாய் 6 மாதங்களாக தொடர் சாதனை ...  பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள்  ஆர்வம் பங்கு முதலீட்டில் சில்லரை முதலீட்டாளர்கள் ஆர்வம் ...
புத்தாண்டின் முதல் ‘யுனிகார்ன்’ ‘ஹொனாசா’வுக்கு கிடைத்த சிறப்பு
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

01 ஜன
2022
19:42

புதுடில்லி:புத்தாண்டின் முதல் ‘யுனிகார்ன் நிறுவனம் எனும் சிறப்பை,‘ஹொனாசா கன்ஸ்யூமர்’ நிறுவனம் பெற்றுள்ளது.
தனிநபர் ஆரோக்கியம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்யும் மின்னணுவர்த்தக தளமான ஹொனாசா கன்ஸ்யூமர் நிறுவனத்தின் மதிப்பு, 1.2 பில்லியன் டாலரை அதாவது, இந்திய மதிப்பில் கிட்டத்தட்ட 9 ஆயிரம்கோடி ரூபாயை தாண்டியுள்ளது. இதை அடுத்து இந்நிறுவனம், யுனிகார்ன் அந்தஸ்தை பெற்றுள்ளது.
ஒரு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனத்தின் மதிப்பு, ஒரு பில்லியன் டாலரை, அதாவது 7,500 கோடி ரூபாயை தாண்டினால், அந்நிறுவனம், யுனிகார்ன் நிறுவனமாக கருதப்படும்.இந்த வகையில், ஹொனாசா நிறுவனமும் யுனிகார்ன் நிறுவனமாக உயர்ந்துள்ளது. அத்துடன் இந்த புத்தாண்டில் யுனிகார்ன் அந்தஸ்துக்கு உயர்ந்த முதல் நிறுவனம் எனும் சிறப்பையும் அடைந்துள்ளது.
அண்மைக் காலமாக, பலசுற்று நிதி திரட்டலை மேற்கொண்ட நிலையில், இதன் மதிப்பு தற்போது 9 ஆயிரம் கோடி ரூபாயை எட்டியுள்ளது.திரட்டப்பட்ட நிதியை கொண்டு, இந்நிறுவனம் மேலும் பல தனிநபர் ஆரோக்கியம் சம்பந்தமான பொருட்களை விற்பனை செய்ய உள்ளது.

அத்துடன், வினியோகம், சந்தைப்படுத்துதல் ஆகிய பிரிவுகளையும் வலுப்படுத்த உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 5 ஆண்டுகளுக்கு முன் துவங்கப்பட்ட இந்நிறுவனம், தற்போது, ஆயிரத்துக்கும் மேற்பட்ட நகரங்களை எட்டிஉள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)