கே.ஒய்.சி., அவகாசம் மேலும் நீட்டிப்பு கே.ஒய்.சி., அவகாசம் மேலும் நீட்டிப்பு ... ஆயிரம் சந்தேகங்கள்: 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்'கில் இனிமேல் ஈடுபடக்கூடாதா? ஆயிரம் சந்தேகங்கள்: 'மல்டி லெவல் மார்க்கெட்டிங்'கில் இனிமேல் ... ...
உங்கள் நிதி ஆரோக்கியம் காப்பதற்கான தீர்மானங்கள்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

02 ஜன
2022
22:19

நிதி திட்டமிடலை மேற்கொள்ளவும், ஏற்கனவே மேற்கொண்ட நிதி திட்டமிடலை ஆய்வு செய்து மாற்றங்களை மேற்கொள்ளவும் புதிய ஆண்டின் துவக்கம் சரியான தருணம். அதிலும் குறிப்பாக கடந்த 2021ம் ஆண்டில் நிதி உலகில் முக்கிய மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையிலும், இந்த ஆண்டு புதிய நிதி போக்குகள் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படும் நிலையிலும், நிதி திட்டமிடலில் கூடுதல் கவனம் செலுத்துவது அவசியமாகிறது.

இந்த ஆய்வை நிதி தீர்மானங்களில் இருந்து துவக்குவதும் பொருத்தமானதே. அந்த வகையில், 2022ம் ஆண்டில் மேற்கொள்ள வேண்டிய நிதி தீர்மானங்களை பார்க்கலாம்.
பெரிய செலவுகள்:

எந்த பெரிய செலவையும் திட்டமிட்டு மேற்கொள்வது என்பது உங்கள் முதல் தீர்மானமாக இருக்கட்டும். இதற்கு முன் கடந்த ஆண்டு செலவுகளை ஆய்வு செய்து, தேவை இல்லாத செலவுகளை கண்டறிய வேண்டும். அதிக செலவுள்ள பொருட்களை வாங்க திட்டமிட்டு சேமிப்பதே சிறந்த வழி.

நிதிக்கு ஒரு நாள்:

நிதி விஷயங்களில் கவனம் செலுத்த மாதம் ஒரு நாளை ஒதுக்குவது என உறுதி கொள்ளுங்கள். நிதி விஷயங்கள் எல்லாம் தவறாமல் குறித்து வைத்து, மாதந்தோறும் ஆய்வுசெய்வதன் வாயிலாக, உங்கள் நிதி முன்னேற்றத்தைகண்டறியலாம். வங்கிக் கணக்கு அறிக்கை, கிரெடிட் கார்டு அறிக்கை போன்றவற்றை கவனமாக வாசிக்கவும்.

கடன் வேண்டாம்:

செலவுகளை திட்டமிட்டு மேற்கொள்வதோடு, கடனில் வாங்குவதையும் தவிர்ப்பது நல்லது. பொருட்களை வாங்கிய பின் பணம் செலுத்தும் பி.என்.பி.எல்., போன்ற வசதி எளிதாக கடன் வலையில் தள்ளிவிடும் என்பதால், இந்த வகை கடனை தவிர்ப்பது என்பதும் தீர்மானமாக இருக்கட்டும்.

வீட்டுக்கடன் :

குறைந்த வட்டி விகித சூழல் மாறும் நிலை உள்ளது. எனவே, வீட்டுக்கடன் பெற்றவர்கள், அதிக வட்டி செலுத்திக் கொண்டிருந்தால், குறைந்த வட்டி தரும் வங்கிக்கு மாறுவதை பரிசீலிக்கலாம். வீட்டுக்கடன் நிலையை ஆய்வு செய்வதும்முக்கிய தீர்மானமாக அமைவது நல்லது.

கிரெடிட் ஸ்கோர்:

பலரும் கிரெடிட் ஸ்கோர் குறித்து அதிகம் கவலைப்படுவதில்லை. ஆனால், கிரெடிட் ஸ்கோரே கடன்தகுதியை தீர்மானிப்பதால், இதில் கவனம் செலுத்துவதுஅவசியம். ஆண்டுக்கு இரு முறை கிரெடிட் ஸ்கோர்அறிக்கையை ஆய்வு செய்வது நல்லது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)