பதிவு செய்த நாள்
25 ஜன2022
21:40

புதுடில்லி:நஷ்டத்தில் தள்ளாட்டம் போட்டுக் கொண்டிருக்கும் வோடபோன் ஐடியா நிறுவனம் அதன் மொபைல் சேவைகளுக்கான கட்டணத்தை மீண்டும் இந்த ஆண்டில் அறிவிக்கும் என தெரிகிறது.
இந்த ஆண்டில் எப்போது வேண்டுமானாலும் மீண்டும் கட்டண உயர்வை அறிவிக்கும் திட்டத்தில் வோடபோன் ஐடியா உள்ளது என, இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனரும், தலைமை செயல் அதிகாரியுமான ரவீந்தர் தக்கார் கூறியுள்ளார்.இதற்கு முன்பாக கடந்த நவம்பரில் ஏர்டெல் நிறுவனத்தை தொடர்ந்து வோடபோன் ஐடியாவும் பிரீபெய்டு கார்டுகளுக்கான கட்டணங்களை அதிகரித்து அறிவித்தது.
இதன் தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின் வாடிக்கையாளர்கள் எண்ணிக்கை 26.98 கோடி என்ற நிலையிலிருந்து 24.72 கோடியாக சரிவைக் கண்டதும் குறிப்பிடத்தக்கது.மேலும் இந்நிறுவனத்தின் ஒருங்கிணைந்த நஷ்டம் கடந்த டிசம்பர் காலாண்டில் 7,230 கோடி ரூபாய் எனும் அளவுக்கு அதிகரித்தது.இந்நிலையில் மீண்டும் கட்டண உயர்வு குறித்து இந்நிறுவனம் திட்டமிட்டு வருகிறது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|