வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  பட்ஜெட்டை பாராட்டி புகழ்ந்த ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குனர் பட்ஜெட்டை பாராட்டி புகழ்ந்த ஐ.எம்.எப்., நிர்வாக இயக்குனர் ...
‘டாப் 10’ பணக்காரர்கள் பட்டியல் வெளியேறிய மார்க் ஸக்கர்பர்க்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

04 பிப்
2022
20:53

புதுடில்லி:‘பேஸ்புக்’ நிறுவனத்தின் தாய் நிறுவனமான ‘மெட்டா’வின் பங்குகள் விலை சரிந்ததை அடுத்து, உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியலில் இருந்து, மார்க் ஸக்கர்பர்க் வெளியேறி இருப்பதாக ‘புளூம்பெர்க்’ தெரிவித்துள்ளது.
முகேஷ் அம்பானி, அதானி ஆகியோர் மார்க் ஸக்கர்பர்க்கை விட பெரிய பணக்காரர்களாகி விட்டனர்.கடந்த டிசம்பர் காலாண்டில், மெட்டா நிறுவனத்தின் லாபம் குறைந்ததை அடுத்து, அந்நிறுவனத்தின் பங்குகள் விலை 24 சதவீதம் சரிவை கண்டன.
இதன் தொடர்ச்சியாக, நிறுவனத்தின் சந்தை மதிப்பு 200 பில்லியன் டாலர் அதாவது, 15 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு சரிவைக் கண்டது.மெட்டா நிறுவனத்தின் நிறுவனரான மார்க் ஸக்கர்பர்க் இந்நிறுவனத்தின் 17 சதவீத பங்குகளை வைத்துள்ளார். இதனால் அவரது சொத்து மதிப்பில், 1.9 லட்சம் கோடி ரூபாயை இழந்துள்ளார்.
இதையடுத்து, புளூம்பெர்க் பில்லியனர்ஸ் பட்டியலில் முதல் 10 இடங்களிலிருந்து வெளியேறியுள்ளார். கடந்த 2015ம் ஆண்டிலிருந்து பார்க்கும்போது, இப்போது முதல் தடவையாக, டாப் 10 பட்டியலில் அவர் இடம் பெறவில்லை.
மெட்டா நிறுவனத்தின் பங்கு விலை சரிந்ததை அடுத்து, அதன் முதலீட்டாளர்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர்.இருப்பினும் இது குறித்து மார்க், ‘‘மக்கள் எங்கள் தயாரிப்புகளுடன் தொடர்ந்து இணைப்பில் இருக்கின்றனர். வணிகங்கள் வளர்வதற்கு எங்கள் சேவையை தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர்,’’ என தெரிவித்து உள்ளார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)