கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான  தவறான எண்ணங்கள்கிரெடிட் கார்டு பயன்பாடு தொடர்பான தவறான எண்ணங்கள் ...  தனித் தனி தலைவர்கள்: டாடா குழுமம் முடிவு தனித் தனி தலைவர்கள்: டாடா குழுமம் முடிவு ...
ஆயிரம் சந்தேகங்கள் : அது என்ன டிஜிட்டல் ரூபாய்?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 பிப்
2022
22:14

'இ - பான்' எப்படி பெறுவது? இ - பான் எந்த சமயத்தில் பயன்படும்?
க.மு.சுந்தரம். சிலமலை.
இ- பான் பெறுவதற்கு இந்த வலைதள பக்கத்தை சொடுக்கவும்: https://eportal.incometax.gov.in/iec/foservices/#/pre-login/instant-e-pan/getNewEpan. அங்கே உங்கள் ஆதார் எண்ணைக் கேட்கும். தொடர்ச்சியாக ஒவ்வொரு படியாக நகர்ந்துகொண்டே இருந்தால், அடுத்த பத்தாவது நிமிடம், இ- பான் கிடைக்கும். வழக்கமான பான் எண் எங்கெல்லாம் பயன்படுமோ, அதே அந்தஸ்தும், பயன்பாடும் தான் இ- - பானுக்கும்.
நான் தனியார் நிறுவனத்தில், 33 ஆண்டுகளாக பணிபுரிகிறேன். பி.பி.எப்., கணக்கு துவங்கி 15 ஆண்டுகள் ஆகிறது. வரும் மார்ச் 2022ல் அது முடிகிறது. மேலும், 3 ஆண்டுகள் நீட்டிக்க விரும்புகிறேன். முடியுமா?
ஆர்.ராஜா, அருப்புக்கோட்டை.
மூன்று ஆண்டுகளுக்கு நீட்டிக்க முடியாது; ஐந்து ஐந்து ஆண்டுகளாகத் தான் நீட்டிக்க முடியும். இதிலும் பங்களிப்பு உடனோ, பங்களிப்பு இல்லாமலோ நீட்டிக்கலாம். நீட்டிக்க விரும்பினால், 'படிவம் எச்.' என்பதை உங்கள் வங்கிக்கோ, அஞ்சலகத்துக்கோ வழங்க வேண்டும்.இதை பி.பி.எப்., முடிவுபெற்ற ஓராண்டுக்குள் கொடுக்கவேண்டும். அப்போது தான் பி.பி.எப்., கணக்கு தொடரும். இல்லையென்றால், உங்கள் கணக்கு முறையற்று இருப்பதாக கருதப்பட்டு, புதிய பங்களிப்புக்கு உரிய வட்டி கிடைக்காது.
வரும் நிதியாண்டில் 'டிஜிட்டல் ரூபாய்' வெளிவரும் என்று சொல்கிறார்களே, அது என்ன? அது இன்னொரு 'கிரிப்டோகரன்சி'யா?
மதுமிதா பாலாஜி, திருவல்லிக்கேணி.
இல்லை. கிரிப்டோகரன்சி என்று தற்போது புழக்கத்தில் இருப்பவை எல்லாம், 'தனியார்' மெய்நிகர் நாணயங்கள். அவற்றை நம் வழக்கமான புரிதலில், பணமாகவோ, ஒரு சொத்தாகவோ கூட அங்கீகரிக்க முடியாது. வங்கிகளும் எந்தவிதப் பரிமாற்றத்துக்கும் அவற்றை ஏற்கப் போவதுமில்லை. இதற்கு மாற்றாக, அதே 'பிளாக்செயின்' நவீன தொழில்நுட்பத்தை அடிப்படையாக கொண்டு, உருவாக்கப்படுபவை தான்' சென்ட்ரல் பேங்க் டிஜிட்டல் கரன்சி'. இதைத் தான் எளிமையாக 'டிஜிட்டல் ரூபாய்' என்று அழைக்கிறோம்.
கடந்த 2020ல் பஹாமாஸ் என்ற நாடு, 'சாண்டு டாலரை'யும், 2021 நைஜீரியா நாடு, 'இ-நைரா' என்ற டிஜிட்டல் நாணயத்தையும் வெளியிட்டு உள்ளன. நாம் வெளியிடவுள்ள டிஜிட்டல் ரூபாயும், தற்போது புழக்கத்தில் உள்ள ரூபாயும் ஒன்றே தான். ரூபாயை தாளாக வைத்துக் கொள்வதற்குப் பதில், அதை டிஜிட்டல் வடிவில் வைத்துக் கொள்ளப் போகிறோம். டிஜிட்டல் ரூபாய்க்கு அரசாங்க உத்திரவாதம் இருக்கும் என்பது தான் இதன் சிறப்பே.
'சென்செக்ஸ்' பங்கு விலை குறியீடு ஒரு லட்சத்தைத் தொடுமா, அப்படியானால் எப்போது?
சேகர், மின்னஞ்சல்.
2024 தொடலாம் என்பது என் கணிப்பு. வரும் மார்ச் மாதம் முதல், அமெரிக்கா கடன் பத்திரங்கள் வாங்குவதை பெருமளவு குறைப்பதோடு, வட்டி விகிதங்களை உயர்த்தத் துவங்கும் போல் தெரிகிறது. இந்த ஆண்டே, ஒரு சதவீதம் அளவுக்கு அமெரிக்க வட்டி விகிதங்கள் உயரலாம் என்று கணிக்கிறார்கள். அப்படியானால், வளரும் நாடுகளின் பங்குச் சந்தைகளுக்கு எண்ணெய் ஊற்றிக்கொண்டு இருந்த அமெரிக்க டாலர்கள், 'சட்'டென்று வடிந்துபோகும். உள்நாட்டு முதலீட்டாளர்கள் தான் பங்குகளை வாங்கிப் போட ஆரம்பிப்பர். இதற்குள் ஓரிருமுறை பங்குச் சந்தை இறங்கி, ஏறும். நல்ல மழை பெய்து, கச்சா எண்ணெய் விலை சகாயமாக இருந்து, கொரோனாவின் புதிய திரிபுகள் எட்டிப் பார்க்காமல் இருந்து, வேறு பொருளாதார 'ஷாக்'குகள் ஏதும் இல்லாமல் இருந்தால், 2024ல் கனவு பலிக்கலாம்.
ரிசர்வ் வங்கி, வட்டி விகிதங்களை உயர்த்தவில்லையே? என்ன சொல்ல வருகிறார் சக்திகாந்த தாஸ்?
ஜே. கார்த்திக், திருப்பூர்.
சல்லிசான வட்டி விகிதத்தில் கடன் வாங்குவதற்கான வாய்ப்பை மேலும் நீட்டித்திருக்கிறார் என்றே தோன்றுகிறது. பொருளாதார ஆய்வு அறிக்கை, அடுத்த நிதியாண்டில் நம் வளர்ச்சி 8 முதல் 8.5 சதவீதம் இருக்கும் என்று தெரிவித்துள்ள நிலையில்,ரிசர்வ் வங்கியின் பணக்கொள்கை குழு 7.8 சதவீத வளர்ச்சியே இருக்கும் என்று தெரிவித்துள்ளது. நம் தொழில் துறையிலும், உற்பத்தித் துறையிலும் இன்னும் பிரச்னைகள் நீடிக்கின்றன. அதை தீர்ப்பதற்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்ற காரணத்தினாலேயே, வட்டி விகிதங்கள் உயர்த்தப்படவில்லை. பணவீக்கமும் அனுமதிக்கப்பட்ட அளவுக்குள்ளேயே இருக்கிறது, அச்சப்பட வேண்டாம் என்றும் கருதியிருக்கலாம். அமெரிக்காவும், பிரிட்டனும் வட்டி விகிதங்களை உயர்த்தட்டும், அதன் தாக்கத்தைப் புரிந்துகொண்டு, நடவடிக்கை எடுக்கலாம் என்றும் பணக் கொள்கை குழு யோசித்திருக்கலாம்.
எல்.ஐ.சி., யில் முதிர்வு தொகை பெறும்போது, பாலிசியில் குறிப்பிட்டது போல சரியாக இருக்கிறதா என்று எப்படி தெரிந்து கொள்வது.
எஸ்.முத்தையா, மதுரை.
பாலிசி முதிர்வடைவதற்கு ஓரிரு மாதங்களுக்கு முன்பே, உங்களுடைய வீட்டுக்கு தபால் வரும். முதிர்வு தொகை என்ன என்பது அப்போதே தெரிந்துவிடும். மேலும், நேரடியாக வங்கி கணக்கில் பணத்தை டிரான்ஸ்பர் செய்வதற்கு ஏதுவாக, வங்கி கணக்கு எண், வங்கிக் கிளை, ஐ.எப்.எஸ்.சி., குறியீடு உள்ளிட்ட விபரங்களைக் கேட்பார்கள். பாலிசிக்கான மூல ஆவண பிரதியை கொண்டுவரச் சொல்வர். அப்போதே, பாலிசியில் குறிப்பிட்டது என்ன; வழங்கப்படுவது என்ன என்பதை நீங்கள் தெரிந்துகொள்ளலாம்.
இந்தியாவில் என்னென்ன விதமான 'பாரெக்ஸ் டிரேடிங்'குகள் அனுமதிக்கப்பட்டுள்ளன? ஆர்.பி.ஐ., அனுமதித்துள்ள பாரெக்ஸ் டிரேடிங் வலைத்தளங்கள் எவை?
மணிகண்டன், வாட்ஸ் ஆப்.

பாரெக்ஸ் டிரேடிங் என்பது சர்வதேச நாணயங்களில் வர்த்தகம் செய்வது. இந்தியாவில், பாரெக்ஸ் பியூச்சர்ஸ்களில் தான் வர்த்தகம் செய்ய முடியும். என்.எஸ்.இ., - பி.எஸ்.இ., மற்றும் ஆர்.பி.ஐ., அனுமதியளித்த மின்னணு வர்த்தக வலைதளங்களில் மட்டுமே வர்த்தகம் செய்ய முடியும். அனுமதிக்கப்பட்ட வலைத்தளங்களுக்கான பட்டியலை அறிய https://m.rbi.org.in/scripts/bs_viewcontent.aspx?Id=4080 என்பதை சுட்டவும். அனுமதி பெறாத பல வலைதளங்கள் வாடிக்கையாளர்களை கவர்ந்து இழுக்கும் விதத்தில், சமூக வலைதளங்களிலும் இதர வகைகளிலும் விளம்பரம் செய்கின்றன. உஷாராக இருங்கள்!

வாசகர்களே, நிதி சம்பந்தப்பட்ட உங்கள் கேள்விகளை, 'இ---மெயில்' மற்றும் 'வாட்ஸ் ஆப்' வாயிலாக அனுப்பலாம்.

ஆயிரம் சந்தேகங்கள்

தினமலர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை - 600 014என்ற நம் அலுவலக முகவரிக்கு அஞ்சல் வாயிலாகவும் அனுப்பலாம். கேள்விகளைச் சுருக்கமாக தமிழில் கேட்கவும்.
ஆர்.வெங்கடேஷ், pattamvenkatesh@gmail.com ph:98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)