செயற்கைக்கோள் ‘பிராட்பேண்டு’ களமிறங்கியது ‘ரிலையன்ஸ் ஜியோ’ செயற்கைக்கோள் ‘பிராட்பேண்டு’ களமிறங்கியது ‘ரிலையன்ஸ் ஜியோ’ ...  வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...
தமிழகத்தில் கால் பதித்த பிரில்லியோகாவின் க்யூஓ பாத்வேர்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

15 பிப்
2022
19:34

சுகாதாரம் மற்றும் கலை இரண்டையும் ஒருங்கிணைக்கும் க்யூஓ, பிரில்லியோகா நிறுவனத்திற்கு சொந்தமான ஒரு முன்னணி சொகுசு ரக பாத்வேர் மற்றும் உபகரண பிராண்டாகும். இந்நிறுவனம், தமிழகத்தில் தனது முதல் பிராண்டு ஷோரூமை துவங்கியுள்ளது. சேலம் மாநகரில் தொடங்கப்பட்டுள்ள இந்த அதிநவீன விற்பனையகம் ஜெயின் மார்பில்ஸில் அண்ட் செராமிக்ஸ், சீலநாயக்கன்பட்டி, பைபாஸ் சேலம் என்ற இடத்தில் அமைந்துள்ளது. இங்கு வாட்டர் க்லோசெட்ஸ், வாஷ் பேஸின்கள், எஸ்எல்பிஎம், ஷவர்கள், டைவர்ட்டர்கள், கன்சீலோ, குளியல் தொட்டிகள், போன்ற பல வகையான பாத்ரூம் உபகரணங்கள் விற்பனைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

பிரில்லோகா லிமிடெட் நிறுவனத்தின் க்யூஓ அண்ட் இன்ஸ்டிடியூஷனல் விற்பனை பிரிவு துணைத்தலைவர் ராகேஷ் நாயர் இந்த ஷோருமை துவங்கி வைத்தார். வீட்டு உரிமையாளர்கள், இத்துறையின் நிபுணர்கள், கட்டிடக்கலை வல்லுநர்கள் மற்றும் கட்டிட உள் வடிவமைப்பாளர்கள் ஆகியோரது மீது தனிக்கவனம் செலுத்தி துவங்கப்பட்டுள்ள இந்த க்யூஓ கிளை, இந்தியாவில் 88வது கிளையாகும்.

புதிதாகத் திறக்கப்பட்டுள்ள இந்த ஸ்டோர் குறித்து பேசிய, பிரில்லோகா நிறுவனத்தின், பாத் புராடக்ட்ஸ் பிரிவின் தலைமை இயக்க அலுவலர் சுதான்ஷு போக்ரியால், ‛‛மக்கள் உலகினை பார்க்கும் விதம் மற்றும் அனுபவிக்கும் விதத்தினை சிறந்ததாக மாற்றவேண்டும்’ என்பதே பிரில்லோகாவின் லட்சியமாகும். அதே நோக்கத்துடன்தான் நாங்கள் இந்த புதிய விற்பனை நிலையத்தை துவங்கியுள்ளோம். இதன் மூலம், அதிக மக்களுக்கு க்யூஓவின் தயாரிப்புகள் சென்றடையும். தென்னிந்திய மார்க்கெட்டில் எங்களது இருப்பிற்கு வலு சேர்ப்பதும் எங்களது பழைய மற்றும் புதிய வாடிக்கையாளர்களுக்கு, பல்வேறு வகையான பாத்ரூம் தயாரிப்புகளை வழங்கி, சொகுசு வசதிகளை அளிக்கும் சாதனங்களுக்கான தேவையை அதிகரிப்பதுமே எங்களது நோக்கமாகும்.

இந்த விரிவாக்கத் திட்டத்தில் தமிழ்நாடு ஒரு முக்கிய பங்கு வகிக்கிறது. எந்தவொரு பாத்வேர் நிறுவனத்தினைக் காட்டிலும் மிகப்பெரிய நெட்வொர்க்கினை கொண்டுள்ள குளியலறை மற்றும் கழிவறை சாதனங்களின் பிராண்டான ஹின்ட்வேர், பிரில்லோகா நிறுவனத்தின் தயாரிப்பாகும். இது நாடு முழுவதும் 259 நகரங்களில் 472 ஸ்டோர்களைக் கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது. நவீனத்தினை விரும்பும் வாடிக்கையாளர்களுக்கு மிகச்சிறந்த சொகுசு அனுபவத்தினை வழங்கும் பிரத்தியேக டிசைனர் பாத்ரூம் சாதனங்களை இந்த விற்பனையகம் வழங்கும். ஒவ்வொரு தயாரிப்பிலும் ஐரோப்பிய கைவண்ணம் இருப்பது இதன் தனிச்சிறப்பாகும், என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)