பீட்டில் பைக்ஸ் அறிமுகப்படுத்தும் குழந்தைகளுக்கான அசெம்ப்ளி வீட்டுச் சேவைபீட்டில் பைக்ஸ் அறிமுகப்படுத்தும் குழந்தைகளுக்கான அசெம்ப்ளி வீட்டுச் ... ...  புதிய பங்கு வெளியீடு 3 நிறுவனங்களுக்கு அனுமதி புதிய பங்கு வெளியீடு 3 நிறுவனங்களுக்கு அனுமதி ...
ஆயிரம் சந்தேகங்கள்: எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு 'டிமேட்' கட்டாயம் தேவையா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

20 பிப்
2022
21:37

நான் ஐந்து ஆண்டுகளுக்கு முன், 30 லட்சம் ரூபாய் வீட்டுக் கடன் வாங்கினேன். அதன் பின், வீட்டின் பேரில் மேலும் இரு கல்விக் கடன்கள் வாங்கி, முறையாக செலுத்தி வருகிறேன். தற்போது அதே வீட்டின் பேரில் மேலும் ஒரு கடன் கேட்டால், தர முடியாது என்கிறார், வங்கி மேனேஜர். புதிதாக கேட்கும் கடனையும் சேர்த்தால் கூட, வீட்டின் மதிப்பில் பாதி கூட வராது. நான் என்ன செய்யலாம்?
டி. இளங்கோவன், திண்டுக்கல்.
சொத்து மதிப்பின் உயர்வுக்கேற்ப, வாடிக்கையாளர் பெறும் கடன் தொகை அளவையும் ‘டைனமிக்’க்காக உயர்த்தித் தர வேண்டும் என்பது, நீண்ட நாள் கோரிக்கை. பெரும்பாலான வங்கிகள் இதை ஏற்பதில்லை.ஒரு கடன் தேவை என்றால், அதற்கு ஒரு சொத்து அடமானமாக இருக்க வேண்டும். இன்னொரு கடன் வேண்டுமானால், முதல் கடனை முழுதாக கட்டிவிட்டு, புதிதாக வாங்கிக் கொள்ளுங்கள் என்று சொல்பவர்களே அதிகம். உங்கள் விஷயத்தில், அதே வீட்டை வைத்துக் கொண்டு, இரண்டு கல்விக் கடன்களும் கொடுத்திருக்கின்றனரே, அதுவே பெரிய விஷயம்.
கடனைத் திருப்பிச் செலுத்துவது தொடர்பாக உங்களுக்கு ஒரு கணக்கு இருப்பது போன்றே, வங்கி மேலாளர்களுக்கும் இன்னொரு கணக்கு இருக்கும். அவர் மறுத்துவிட்டால், ஒன்றும் செய்வதற்கில்லை. அவர் ‘ரிஸ்க்’ எடுக்க தயாராக இல்லை என்று அர்த்தம்.
நான் 2010 – 13 வரை, ஒரு கல்வி நிறுவனத்தில் வேலை பார்த்துவிட்டு நின்று விட்டேன். பி.எப்., பணத்துக்கு இது நாள் வரை கணக்கு முடிக்கவில்லை. அந்த சமயத்தில் ஆதார் கிடையாது. இப்போது கணக்கை முடித்து பணம் எடுக்க முடியுமா?
சந்திரா.ஆர், மின்னஞ்சல்.
மூன்று ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் பணம் இருந்தால், அதற்கு வட்டி கிடையாது. ஏழு ஆண்டுகளுக்கு மேல் கோரப்படாமல் இருந்தால், அந்தத் தொகை, ‘சீனியர் சிட்டிசன் வெல்பேர் பண்டு’க்கு மாற்றி விடப்பட வாய்ப்பு உண்டு. அதனால், உடனடியாக உங்கள் பழைய கல்வி நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு, யு.ஏ.என்., எண் எடுத்துச் தரச் சொல்லுங்கள்.
அதில் உங்கள் ஆதாரும், மொபைல் எண்ணும் இணைக்கப்பட்டு இருக்கும். ஒருவேளை தற்போது வேறு ஏதேனும் கல்வி நிறுவனத்தில் தாங்கள் பணியாற்றிக் கொண்டு இருந்தீர்கள் என்றால், ஒரு பிரச்னையும் இல்லை. பழைய தொகையை, தற்போதைய பி.எப்., கணக்கோடு இணைத்து, மொத்த பணத்தையும் பெற்றுக்கொள்ளலாம்.
‘எல்.ஐ.சி., பங்குச் சந்தைக்கு வருகிறது; டிமேட் கணக்கு துவங்குங்கள்’ என்று சொல்லிக் கொண்டே இருக்கின்றனரே? எல்.ஐ.சி., பாலிசி வைத்திருப்பவர்கள் எல்லாரும் டிமேட் கணக்கு வைத்திருக்க வேண்டுமா?
ஜே.வீரபாண்டியன், திருவள்ளூர்.
எல்.ஐ.சி., பாலிசிதாரர்களுக்கு, ஐ.பி.ஓ., விலையில் சற்றே சலுகை காண்பிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு இருக்கிறது. அதற்காகத் தான் பான் எண்ணை, பாலிசியோடு இணைக்க சொல்கின்றனர்; டிமேட் கணக்கு துவங்கச் சொல்கின்றனர்.உங்களுக்கு எல்.ஐ.சி., நிறுவனத்தின் ஐ.பி.ஓ.,வில் முதலீடு செய்ய ஆர்வம் இல்லை என்றால், டிமேட் கணக்கு துவங்க வேண்டிய கட்டாயம் இல்லை. பாலிசிக்கான வழக்கமாக தேவைப்படும் அடிப்படை விபரங்களை மட்டும் கொடுத்தால் போதும்.
‘வீடியோ கே.ஒய்.சி., செய்ய வேண்டும், ஆதார் அட்டையையும், பான் அட்டையையும் காட்டுங்கள்’ என்று வங்கிகளும், நிதி நிறுவனங்களும் அழைக்கி்ன்றனரே. இதை நம்பலாமா?
ஜி.என்.சேதுபதி, வத்தலகுண்டு.
உங்கள் சந்தேகம் நல்லது, பாராட்டுகள். எல்லா அழைப்புகளையும் அப்படியே நம்ப வேண்டும் என்று அர்த்தமில்லை; உஷாராக இருப்பது நல்லதே. புது கணக்குகளுக்கும், முதலீடுகளுக்கும், ‘வீடியோ’ வாயிலான வாடிக்கையாளர் இனங்காணும் நடைமுறைக்கு, இந்திய ரிசர்வ் வங்கி கடந்த ஆண்டு அனுமதி வழங்கியது. இதையொட்டியே அழைப்புகள் வருகின்றன. இது குறித்து மின்னஞ்சல் வருகிறதா என்றும் பாருங்கள். அதில் பெரும்பாலும் ‘ஜூம்’ லிங்கும், உங்களோடு தொடர்பு கொள்ளக்கூடிய வாடிக்கையாளர் தொடர்பு முகவருடைய எண்ணும் கொடுக்கப்பட்டு இருக்கும். மேலும், சந்தேகம் இருந்தால், குறிப்பிட்ட வங்கியைத் தொடர்பு கொண்டு, அவர்கள் அனுப்பிய தகவல்களை உறுதிப்படுத்தி, பின்னர் கே.ஒய்.சி.,க்கு ஆயத்தம் ஆகுங்கள்.
மியூச்சுவல் பண்டில், எஸ்.ஐ.பி., நாமினேஷனை, ஒருவர் பெயரிலிருந்து மற்றொருவர் பெயருக்கு, அந்த கணக்கு பரிவர்த்தனை காலத்தின் இடையில் மாற்ற இயலுமா?
சுப்புலக்ஷ்மி, மின்னஞ்சல்.
தாராளமாக மாற்றலாம். எத்தனை முறை வேண்டுமானாலும் மாற்றலாம். ஒவ்வொரு முறையும், நாமினேஷன் படிவத்தை முழுமையாக பூர்த்தி செய்து, மியூச்சுவல் பண்டின் வாடிக்கையாளர் மையத்திலோ, பதிவாளரிடமோ அளிக்க வேண்டும். நீங்கள் மூன்று பேர் வரை நாமினியாக போடலாம். ஒவ்வொருவருக்கும் எத்தனை சதவீதத் தொகை போய் சேர வேண்டும் என்பதையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும்.
துணிக் கடைகளில், மளிகைக் கடைகளில் 1,000 ரூபாய்க்கு குறைவாக துணிகள், மளிகை பொருட்களை வாங்கினால், ஜி.எஸ்.டி., வசூலிக்கக்கூடாது என என் நண்பர் கூறுகிறார். இது உண்மையா?
ரோ.சு.சத்தியமூர்த்தி, திருத்தணி.
உங்கள் நண்பர் வாட்ஸ் ஆப் செய்திகளிலேயே மூழ்கி இருப்பார் போலிருக்கிறது! இது உண்மை இல்லை. ஒரு குறிப்பிட்ட தொகை வரை ஜி.எஸ்.டி., வசூலிக்கக் கூடாது என்று எந்த சட்டவிதியும் இல்லை. ஒருசில பொருட்கள், ஜி.எஸ்.டி., பட்டியலில், பூஜ்ஜிய வரி அடுக்கில் இருக்கும். அதற்கு வரி வசூலிக்க மாட்டார்கள்.
உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்கப் போகிறது என்ற பதற்றம், பங்குச் சந்தையிலும் எதிரொலிக்கிறதே? இந்த சமயத்தில் முதலீடு செய்யலாமா?
வனிதா ராமகிருஷ்ணன், குரோம்பேட்டை.
நல்ல நிறுவனங்களை இனங்கண்டு, அவர்களுடைய அடிப்படைகளை சரியாகப் புரிந்து, பட்டியலிட்டு வைத்துக்கொள்ளுங்கள். போர் பதற்றம் காரணமாக, பங்குச் சந்தையில் ஏற்ற _ இறக்கம் இருக்கவே செய்யும். அடுத்து மார்ச் மாதம், அமெரிக்காவில் நடக்கப் போகும் வட்டி உயர்வும், இந்த ஏற்ற, இறக்கத்துக்கு உதவும். இது வாய்ப்பு தான். ஆனால், ரொம்ப ஜாக்கிரதையாக பயன்படுத்திக் கொள்ளுங்கள்.
எல்லா நேரமும் சந்தை மேலே உயர்ந்துகொண்டே போகும் என்று எதிர்பார்க்க வேண்டாம். சரிவுகள் இருந்தாலும், நீண்ட கால அளவில் பல பங்குகள் நல்ல வளர்ச்சியைக் கொடுக்க வாய்ப்புண்டு.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை, ‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.
ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.
ஆர்.வெங்­க­டேஷ்,
pattamvenkatesh@gmail.com
ph:98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)