முதலீட்டின் பலனை பாதிக்கும்   கசிவுகளை கண்டறிவது எப்படி?முதலீட்டின் பலனை பாதிக்கும் கசிவுகளை கண்டறிவது எப்படி? ... புதிய இலக்குடன் தமிழ்நாட்டில் நுழைந்த ‘டன்ஸோ டெய்லி’ சேவை புதிய இலக்குடன் தமிழ்நாட்டில் நுழைந்த ‘டன்ஸோ டெய்லி’ சேவை ...
ஆயிரம் சந்தேகங்கள் எல்.ஐ.சி., பாலிசி வைத்திருக்கும் எல்லாருக்கும் பங்குகள் கிடைக்குமா?
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

27 பிப்
2022
22:31

எனக்கு ‘டிமேட்’ கணக்கு துவக்கி கொடுத்த ‘பி.எம்.ஏ., வெல்த் கிரியேட்டர்ஸ்’ என்ற நிறுவனம், இப்போது இல்லை. இரண்டு நிறுவன பங்குகள் அதில் இருக்கின்றன. அவற்றை எப்படி நான் பெறுவது?
அருணா, மதுரை.
நீங்கள் குறிப்பிடும் நிறுவனம், வாடிக்கையாளர்களுடைய பங்குகளை, தன்னுடைய பங்குகளாக கணக்கு காண்பித்து, 100 கோடி ரூபாய் வரை மோசடி செய்தது என்ற காரணத்திற்காக, பங்குச் சந்தை கட்டுப்பாட்டு அமைப்பான ‘செபி’யால் தடை செய்யப்பட்டு உள்ளது. புரோக்கரேஜ் நிறுவனம் இயங்கினாலும், இயங்காவிட்டாலும், நீங்கள் வாங்கிய பங்குகள் உங்கள் டிமேட் கணக்கில் இருக்குமானால், ஒன்றும் கவலை இல்லை. இன்னொரு நம்பகமாக நிறுவனத்தில், மற்றொரு டிமேட் கணக்கை துவக்கி, பழைய நிறுவனத்தில் இருக்கும் பங்குகளை இதற்கு மாற்றிக் கொள்ளலாம். கொஞ்சம் அலைய வேண்டி இருக்கும். பழைய டிமேட் கணக்கு எண், வாங்கிய பங்குகளின் விபரம் ஆகியவற்றை எல்லாம் பங்குகளின் பாதுகாவலரான சி.டி.எஸ்.எல்., அல்லது என்.எஸ்.டி.எல்., மற்றும் செபிக்கு தெரிவித்து, மாற்றிக்கொள்ள வேண்டும்.
நான் பங்குச் சந்தைக்கு புதுசு. எல்.ஐ.சி.,யில் முதலீடு செய்ய ஆர்வமாக உள்ளேன். என் பெயரில் உள்ள பாலிசிகளில் பான் எண்ணை இணைத்துவிட்டேன். டிமேட் எண்ணையும் பாலிசியில் இணைக்க வேண்டுமா? பாலிசி வைத்துள்ள அனைவருக்கும் பங்குகள் கிடைக்குமா?

முத்துக்குமார், சீர்காழி.
பங்குச் சந்தைக்குள் காலடி எடுத்து வைக்க விரும்பும் உங்களை வரவேற்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். டிமேட் எண்ணை, பாலிசி எண்ணோடு இணைக்க வேண்டாம்.எல்.ஐ.சி., ஐ.பி.ஓ., இன்னும் வரவில்லை. மார்ச் மாதம் தான் வரப் போகிறது. அப்போது, பாலிசி வைத்திருப்பவர்களுக்கு ஐ.பி.ஓ., விலையில் சிறிது சலுகை காண்பிக்கப்படும் என்று சொல்லியிருக்கிறார்கள். பங்கு விலை என்ன, சலுகை விலை என்ன என்பதெல்லாம் இன்னும் தெரியவில்லை. அறிவிப்புக்காக காத்திருங்கள். அறிவிப்பு வந்த பின்னர், பாலிசி வைத்திருப்பவர்களுக்கான சலுகை விலையில், நீங்கள் பங்குகள் வாங்க பணம் செலுத்தும் போது பாலிசி எண் கேட்கப்படலாம் என்பது தான் என் யூகம்.

மேலும், பாலிசி வைத்திருக்கும் அனைவருக்கும் பங்குகள் கிடைக்காது. மற்றவர்களை விட சற்றே சலுகை விலையில் பங்கை வாங்க அப்ளை செய்யலாம் என்பதைத் தவிர, பங்குகள் நிச்சயம் கொடுக்கப்படும் என்பதற்கான எந்த உத்தரவாதமும் இல்லை.

ஜி.எஸ்.டி.,யிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ள பொருட்கள் மற்றும் சேவைகள் எவை என்பதை எப்படி அறிந்து கொள்வது?

க.மு.சுந்தரம், சிலமலை.
அரசாங்கம் வழங்கியுள்ள இந்தப் பட்டியலைப் பாருங்கள்: https://cbic-gst.gov.in/gst-goods-services-rates.html. உங்களுக்கான பதில் இதில் கிடைக்கும்.
நான் எடுத்த காப்பீட்டு பாலிசி அண்மையில் முதிர்ச்சி அடைந்தது. அதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே, அந்த அலுவலகத்துக்கு போய் விசாரித்தேன். 2 லட்சம் ரூபாய் பாலிசி, போனஸோடு சேர்ந்து 3.05 லட்சம் ரூபாயாக கிடைக்கும்; கூடவே வாழ்க்கை முழுதும் கவரேஜ் இருக்கும் என்றனர். கவரேஜ் இல்லையென்றால், 3.77 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்றனர்.நான், கவரேஜ் வேண்டும் என்பதை வலியுறுத்திவிட்டு வந்தேன். தற்போது, என் வங்கிக் கணக்கில் 3.77 லட்சம் ரூபாயை வரவு வைத்துள்ளனர். மீண்டும் விசாரித்தபோது, நீங்கள் எடுத்த பாலிசிக்கு, வாழ்க்கை முழுமைக்கான கவரேஜ் கிடையாது என்கின்றனர். நான் என்ன செய்வது?
சாந்தி சீனிவாசன், வாட்ஸ் ஆப்.
நிறைய பேர், பாலிசி கவரேஜ் பற்றிய விபரங்களை முழுமையாகச் சொல்வதில்லை. நாமும் அவசரத்தில் கையெழுத்து போட்டு கொடுத்துவிடுகிறோம். கொஞ்சம் விசாரித்தீர்கள் என்றால், நீங்கள் எடுத்த பாலிசியில், வாழ்க்கை முழுமைக்குமான கவரேஜ் கிடையாது என்பது, சிறிய எழுத்தில் எங்கேனும் அச்சிடப்பட்டிருக்கும். அதை எடுத்துக் காண்பிப்பர்; எரிச்சல் தான் மிஞ்சும். அதனால், அதிகம் கவலை கொள்ளாதீர்கள். வந்த பணத்தை, நான்கைந்து நல்ல மியூச்சுவல் பண்டு திட்டங்களில் போட்டு வையுங்கள். தேவையான வருவாயை உருவாக்கிக் கொள்ளுங்கள்.

எல்.ஐ.சி., பங்குகளை பிறர் உதவியின்றி, ‘டிமேட்’ கணக்கு துவக்கி, நாமே வாங்கி, தொடர்ந்து பராமரிக்க முடியுமா? பாலிசிதாரர் தவிர, இதர பொதுமக்களும் பங்குகளை வாங்க இயலுமா?

கே.முத்தையா, மதுரை.
தாராளமாக முடியும். டிமேட் கணக்கு என்பது அந்த காலத்தில் தபால் பெட்டி எண் வாங்குவது மாதிரியானது. முந்தைய காலத்தில் நிறுவன பங்குகள் காகிதத்தில் கொடுக்கப்பட்டன. அதன்பின் அவை காகிதமல்லாத அதாவது ‘டிமெட்டீரியல்’ எனும் ‘டிமேட் டிஜிட்டல்’ பங்குகளாக வழங்கப்படுகின்றன. காகிதம் என்றால், நீங்களே பத்திரமாக பாதுகாப்பீர்கள். டிமேட் பங்குகளை ஒருவர் பாதுகாக்க வேண்டும் அல்லவா? அதற்கு தான் சி.டி.எஸ்.எல்., மற்றும் என்.எஸ்.டி.எல்., எனும் பங்குகளின் பாதுகாவலர்கள் உருவானார்கள்.

நீங்கள் இவர்களிடம் ஒரு கணக்கை துவக்குவதை தான், டிமேட் கணக்கை துவக்குவது என்று சொல்கின்றனர். எல்.ஐ.சி., பங்குகளை நீங்கள் வாங்கினீர்கள் என்றால், அது இந்த இரண்டு பெட்டிகளில், எதில் நீங்கள் கணக்கு வைத்திருக்கிறீர்களோ, அதில் வந்து விழும். அதன் மதிப்பு வளர்கிறதா, இல்லையா என்று உங்களால் அறிந்து கொள்ள முடியும். தேவைப்பட்டால் விற்பனை செய்யவும் முடியும்.பாலிசிதாரர்களை தவிர, இதர பொதுமக்களும் எல்.ஐ.சி., பங்குகளை வாங்க முடியும்.

என் மகன் எம்.பி.பி.எஸ்., இறுதியாண்டு படிக்கிறார். 2021 கொரோனா காலத்தில் மூன்று மாதங்களுக்கு தாற்காலிக மருத்துவ அதிகாரியாக நியமிக்கப்பட்டார். அப்போது அவரது சம்பளத்தில் டி.டி.எஸ்., பிடித்தம் செய்யப்பட்டது. பின்னர் அவர் கல்வியைத் தொடர்கிறார். எப்படி அந்த டி.டி.எஸ்., பணத்தைத் திரும்பப் பெறுவது?
மாணிக்கம், திருச்சி.
உங்கள் மகன் பான் எண் வைத்திருப்பார் என்று நம்புகிறேன். வரும் நிதியாண்டில், வருமான வரி ரிட்டர்ன் தாக்கல் செய்யப் போகும்போது, 26 ஏ.எஸ்., படிவத்தில், பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ்., தொகை பிரதிபலிக்கும். மாணவர் என்பதால் அவரது மொத்த வருவாய், 2.5 லட்சம் ரூபாய்க்குள் தான் இருக்கும் என்று நம்புகிறேன். வருமான வரி விலக்குக்கான வரையறைக்குள் தான் உங்கள் மகனது வருவாய் வருகிறது என்பதால், பிடித்தம் செய்யப்பட்ட டி.டி.எஸ்., தொகை ‘ரீபண்டு’ ஆகிவிடும்.
வாச­கர்­களே, நிதி சம்­பந்­தப்­பட்ட உங்­கள் கேள்­வி­களை,‘இ--–மெயில்’ மற்­றும் ‘வாட்ஸ் ஆப்’ வாயி­லாக அனுப்­ப­லாம்.

ஆயி­ரம் சந்­தே­கங்­கள்
தின­ம­லர், 39, ஒயிட்ஸ் சாலை, சென்னை – 600 014என்ற நம் அலு­வ­லக முக­வ­ரிக்கு அஞ்­சல் வாயி­லா­க­வும் அனுப்­ப­லாம். கேள்­வி­க­ளைச் சுருக்­க­மாக தமி­ழில் கேட்­க­வும்.

ஆர்.வெங்­க­டேஷ்,

pattamvenkatesh@gmail.com

ph:98410 53881

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)