பதிவு செய்த நாள்
02 ஏப்2022
19:52

19 நாடுகளில் பணவீக்கம்
‘யூரோ’ பணத்தை பயன்படுத்தும் 19 ஐரோப்பிய நாடுகளில், கடந்த மார்ச் மாதத்தில், பணவீக்கம் 7.5 சதவீதமாக உயர்ந்துள்ளது.கடந்த 1997ம் ஆண்டுக்கு பின், இந்நாடுகளில் பணவீக்கம், மார்ச்சில் மாதத்தில் தான் அதிகபட்ச உச்சத்தை தொட்டுள்ளது.
‘பி – நோட்’ முதலீடு
இந்திய மூலதன சந்தையில், ‘பி – நோட்’ எனும் பங்கேற்பு பத்திரங்கள் வாயிலாக மேற்கொள்ளப்பட்ட முதலீடு, கடந்த பிப்ரவரி மாத இறுதி நிலவரப்படி 89 ஆயிரத்து 143 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.இந்திய நிறுவனங்களின் வருவாய் அதிகரித்து வரும் நிலையில், அன்னிய முதலீட்டாளர்களின் இந்த முதலீடு, வரும் மாதங்களிலும் அதிகரிக்கும் என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.
எரிபொருள் விற்பனை உயர்வு
நாட்டின் எரிபொருள் விற்பனை, கடந்த மார்ச் மாதத்தில், கொரோனாவுக்கு முந்தைய நிலையை விட அதிகரித்துள்ளது.கொரோனா தடைகள் நீக்கப்பட்டு வருவது, எரிபொருள் விலை மேலும் அதிகரிக்ககூடும் எனும் எதிர்பார்ப்பு ஆகியவை காரணமாக, இம்மாதத்தில் விற்பனை அதிகரித்துள்ளது.
வாகன பாகங்கள் தொழில்
நடப்பு நிதியாண்டில், வாகன பாகங்கள் தயாரிப்பு தொழில் 8 – 10 சதவீதம் அளவுக்கு வளர்ச்சி காணும் என, தர நிர்ணய நிறுவனமான ‘இக்ரா’ அறிக்கை தெரிவித்துள்ளது.
நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், சப்ளை விவகாரங்கள் மற்றும் பொருட்களின் விலை அதிகரிப்பு ஆகியவை சரியாகிவிடும் என்பதால், இந்த வளர்ச்சி காணும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘ஸ்டார்ட் அப்’ நிதி
உள்நாட்டு ‘ஸ்டார்ட் அப்’ நிறுவனங்கள், நடப்பு ஆண்டின் முதல் மூன்று மாதங்களில் மட்டும், கிட்டத்தட்ட 91 ஆயிரத்து 200 கோடி ரூபாய் நிதியை திரட்டி உள்ளன.இதற்கு முந்தைய ஆண்டின் முதல் மூன்று மாதங்களில், இவை திரட்டிய தொகை, 30 ஆயிரத்து 400 கோடி ரூபாயாக இருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் பொது செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|