வர்த்தக துளிகள் வர்த்தக துளிகள் ...  தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு தங்கத்தின் தேவை 18 சதவீதம் சரிவு உலக தங்க கவுன்சில் அறிவிப்பு ...
ஜெப்ரானிக்ஸின் முதல் பெண் விளம்பரத் தூதராக ஜான்வி கபூர் நியமனம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

28 ஏப்
2022
15:16

இந்தியாவின் முன்னணி ஐடி சாதனங்கள், மின்னணு சாதனங்கள் தயாரிப்பாளரான ஜெப்ரானிக்ஸ், #ZebronicsForLife என்ற பிரச்சாரத்துடன் தங்களுடைய ஸ்மார்ட் வாட்ச்கள் மற்றும் ஒலி சார்ந்த சாதனங்களுக்கான விளம்பரத் தூதராக ஜான்வி கபூரை களமிறக்கியுள்ளது.

ஜெப்ரானிக்ஸ் சாதனங்கள் உயர்தர கட்டமைப்பு, ஈர்க்கக்கூடிய அம்சங்கள் மற்றும் தனித்து நிற்கும் உயர் ரக தயாரிப்புகள் மூலம் தொழில்நுட்ப இடைவெளியை நிரப்புகிறது. இந்த புகழுக்கு மேலும் வலுச்சேர்க்கும் வகையில் இந்நிறுவனம் இளமையின் அடையாளமான ஜான்வி கபூரை விளம்பரத் தூதராக நியமித்துள்ளது.

இதுபற்றி ஜான்வி கபூர் கூறுகையில், “ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் பிரதிநிதியாக இருப்பதில் பெருமைப்படுகிறேன். தனித்துவமான அம்சங்கள், உயர்தர கட்டமைப்பு மற்றும் வசீகரிக்கும் வடிவமைப்பு ஆகியவற்றுடன் கவரக்கூடிய வகையிலான ஒலி சார்ந்த மற்றும் அணியக்கூடிய சாதனங்களின் வரிசையில் நிறுவனம் வழங்குகிறது. மேலும் தங்களது தயாரிப்புகளை அடிக்கடி மேம்படுத்தப்படுகின்றன. எந்தத் துறையிலும், நீங்கள் தொடர்ந்து முன்னணியில் இருக்க வேண்டுமென்றால் தொடர்ந்து உங்கள் திறமையை நீங்களே வளர்த்துக் கொள்ள வேண்டும். இந்த நிறுவனம் அதற்கும் மேலாகவே செய்கிறது. உங்களை தனித்துவமாகக் காட்டும் சிறந்த செயல்பாடுகளைக் கொண்ட இத்தனை வகையான தேர்வுகள், வண்ணங்கள் மற்றும் வகைகள் உங்களுக்குத் தேர்வு செய்வதில் சிரமத்தை ஏற்படுத்தும்” என்கிறார்.

ஜெப்ரானிக்ஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் மற்றும் இயக்குனர் ராஜேஷ் தோஷி கூறுகையில், “தற்போதைய சந்தை மிக வேகமாக மாறி வருகிறது. இதுவரையில் இல்லாத வேகத்தில் தயாரிப்புகள் சந்தைக்கு வருகின்றன. எங்களுடைய உயர்தர வரிசை டால்பி ஒலிபெருக்கிகள், அலெக்ஸா வசதியுள்ள தயாரிப்புகள், வயர்லெஸ் இயர்பட்ஸ் மற்றும் பல தயாரிப்புகள் மூலம் பெருவாரியான மக்களுக்காக முடியாததை முடித்துக் காட்டியுள்ளோம். சமீப வருடங்களில் எங்களது ஸ்மார்ட் வாட்ச் பிரிவு பன்மடங்கு வளர்ச்சியை எட்டியுள்ளது. இதன் மூலம் எங்கள் நிறுவனம் எப்பொழுதும் கொண்டிருக்கும் “பெருவாரியானவர்களுக்கான உயர்தரம்” என்ற நோக்கத்தை எட்டியுள்ளோம். ஜான்வி கபூர் இளைஞர்களின் பிரதிநிதியாக மட்டுமல்லாமல், வேறு யாரிடமும் இல்லாத அளவிற்கு உற்சாகமும் புத்துணர்ச்சியும் அவரிடம் நிரம்பியுள்ளது. நளினம் மற்றும் செயல்பாட்டுடன் முடியாததை முடித்துக் காட்டுவதில் நம்பிக்கை கொள்வதில் எங்கள் நிறுவனத்தின் வடிவமைப்பு, நளினம் மற்றும் செயல்பாடு ஆகியவை ஒரே கோட்டில் இணைந்துள்ளது” என்றார்.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)