பதிவு செய்த நாள்
06 மே2022
19:41

புதுடில்லி:நாட்டின் முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான, ‘மகிந்திரா அண்டு மகிந்திரா’ அதன் வாகன வணிகத்தை, மூன்று பிரிவுகளாக பிரிக்க திட்டமிட்டுள்ளது.
இது குறித்து விபரமறிந்த ஒருவர் கூறியதாவது:மகிந்திரா குழுமத்தின் வருவாயை பொறுத்தவரை, 55 சதவீத பங்களிப்பை வாகன தயாரிப்பு பிரிவு வழங்கி வருகிறது. இந்நிலையில், வாகன வணிகத்தை மூன்றாக பிரிக்க திட்டமிடப்பட்டு வருகிறது. மின்சார வாகன பிரிவு, பயணியர் வாகன பிரிவு மற்றும் டிராக்டர் பிரிவு என மூன்று தனித்தனி வணிகமாக பிரிக்க உள்ளது.
மின் வாகன பிரிவு புனேயில் உள்ள ஆலையுடன், இத்தாலிய வடிவமைப்பு நிறுவனமான ‘ஆட்டோமொபில் பின்இன்பரினா’ உடன் இணைந்து செயல்படும் என தெரிகிறது. வேளாண் கருவிகள் மற்றும் டிராக்டர் பிரிவுஏற்கனவே ‘பஞ்சாப் டிராக்டர்’ நிறுவனத்தை கையகப் படுத்தி தயாராக இருக்கிறது.
பயணியர் வாகன பிரிவு, மும்பையை அடிப்படையாக கொண்டு தனியாக செயல்படும்.இந்த பிரிவுக்கு முக்கிய காரணமாக இருப்பது மின் வாகன வணிகமே. இதன் வாயிலாக புதிய முதலீடுகளையும், கூடுதல் சந்தை மதிப்பையும் பெற மகிந்திரா முயற்சிக்கிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் ஆட்டோமொபைல் செய்திகள்





|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
![]() |
|
|
|