பதிவு செய்த நாள்
19 மே2022
20:00
வரலாற்று சரிவில் ரூபாய்
டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு, இதுவரை இல்லாத வகையில், நேற்று 77.73 ரூபாயாக சரிவைக் கண்டுள்ளது.கடந்த 10 வர்த்தக தினங்களில், ஐந்தாவது முறையாக, நேற்று வரலாற்று சரிவை கண்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.வெளியேறிய சீன நிறுவனங்கள்சீன நிறுவனமான ‘அலிபாபா’ மற்றும் அதன் துணை நிறுவனமான ‘ஆன்ட்பின்’ ஆகிய நிறுவனங்கள், தங்களிடம் உள்ள ‘பேடிஎம் மால்’ நிறுவனத்தின் 43 சதவீத பங்குகளை விற்பனை செய்துள்ளன. இந்நிறுவனங்கள், இப்பங்குகளை 42 கோடி ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளன. இதையடுத்து, பேடிஎம் மால் நிறுவனத்தின் மதிப்பு, 103 கோடி ரூபாயாக சரிந்து உள்ளது.பங்கு விலை அறிவிப்புசிறப்பு வகை ரசாயன தயாரிப்பில் ஈடுபட்டுள்ள ‘ஈதர் இண்டஸ்ட்ரீஸ்’ 24ம் தேதி, புதிய பங்கு வெளியீட்டுக்கு வரும் நிலையில், அதன் பங்கின் விலை 610 – 642 ரூபாயாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இந்நிறுவனத்தின் பங்கு வெளியீடு, 24ம் தேதி துவங்கி, 26ம் தேதியன்று முடிகிறது.விளையாட்டு பொம்மை தொழிற்சாலை ‘மைக்ரோ பிளாஸ்டிக்ஸ் இந்தியா’ நிறுவனம், தமிழகத்தில் ஓசூரில் விளையாட்டு பொம்மைகள் தொழிற்சாலையை, 500 கோடி ரூபாய் முதலீட்டில் அமைக்கிறது.இந்த ஆலையை அமைப்பதன் வாயிலாக, அடுத்த மூன்றிலிருந்து, நான்கு ஆண்டுகளில், கிட்டத்தட்ட 6 ஆயிரம் வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.அமெரிக்க சந்தையிலும் சரிவுஅமெரிக்க பங்குச் சந்தையில், ‘எஸ் அண்டு பி., 500’ குறியீட்டு எண், ஒரு நாளின் வர்த்தகத்தில், கடந்த இரண்டு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிவைக் கண்டு உள்ளது.பொருட்கள் விலை உயர்வால், பணவீக்கம் அதிகரித்து, அமெரிக்க பொருளாதாரம் பாதிப்பை கண்டுள்ளதை அடுத்து, சந்தையில் இந்த சரிவு ஏற்பட்டு உள்ளது.
மேலும் பொது செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|