மீண்டும் முதலிடத்தில் அம்பானிபின்னுக்கு தள்ளப்பட்ட அதானிமீண்டும் முதலிடத்தில் அம்பானிபின்னுக்கு தள்ளப்பட்ட அதானி ... தங்கம் இறக்குமதி அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறை உயர்வு தங்கம் இறக்குமதி அதிகரிப்பு வர்த்தக பற்றாக்குறை உயர்வு ...
உணவகங்களில் சேவை கட்டணம் தடுக்க ரெடியாகிறது சட்டம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

03 ஜூன்
2022
19:45

புதுடில்லி:உணவகங்கள் தங்களுடைய ‘பில்’லில், சேவை கட்டணத்தை சேர்க்க கூடாது என, உணவு மற்றும் நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் பியுஷ் கோயல் தெரிவித்துள்ளார்.
உணவகங்களில், வலுக்கட்டாயமாக சேவை கட்டணத்தை சேர்த்து பில் போடுவதாக, பலதரப்புகளிலிருந்தும் புகார்கள் வருகின்றன.இதையடுத்து, அமைச்சகம், உணவக பிரதிநிதிகளுடன் கடந்த வியாழன் அன்று பேச்சு நடத்தியது. இதன் தொடர்ச்சியாக, அமைச்சர் பியுஷ் கோயலிடம் கேள்வி எழுப்பப்பட்டபோது, அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது:உணவக உரிமையாளர்கள், ஊழியர்களுக்கு ஊதியத்தை அதிகரிக்க விரும்புகின்றனர் எனில், உணவு விலையை ஏற்றிக் கொள்ளட்டும். அதற்கு எந்த தடையும் இல்லை. உணவுக்கான விலையை அவர்களே நிர்ணயித்துக் கொள்ளலாம். இதற்கு நாட்டில் எந்த கட்டுப்பாடும் கிடையாது.ஆனால், அதற்கு பதிலாக, சேவை கட்டணம் எனும் பெயரில், அதை நுகர்வோரிடம் திணிப்பது சரியாகாது. உரிமையாளர்கள், ஊழியர்களுக்கான ஊதியத்தை உயர்த்திக் கொள்ளவோ, அல்லது உணவுக்கான விலையை அதிகரித்துக் கொள்ளவோ தடை எதுவும் இல்லை.
ஆனால், மறைமுக விலை இருந்தால், உண்மையான விலையை எப்படி அறிய முடியும்?சேவையில் திருப்தி ஏற்பட்டால், நுகர்வோர் ‘டிப்ஸ்’ தருகின்றனர். அதை தொடர்வதில் ஒன்றும் இல்லை.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.இதற்கிடையே, அமைச்சகம் தரப்பில், நியாயமற்ற இந்த கட்டண வசூலிப்பை தடுக்க, உரிய சட்டம் வெளியாகும் எனக் கூறப்பட்டு உள்ளது.

Advertisement

மேலும் பொது செய்திகள்

business news
புதுடில்லி–ஆர்.பி.ஜி., குழுமத்தின் தலைவர் ஹர்ஷ் கோயங்கா, புதுமையான முறையில் அச்சிடப்பட்ட திருமண அழைப்பிதழ் ... மேலும்
business news
புதுடில்லி-–நடப்பு ஆண்டு துவக்கத்தில், அதிக அனல் காற்று வீசியதன் காரணமாக, நடப்பு ஆண்டில் பணவீக்கம் அதிகரிக்க ... மேலும்
business news
புதுடில்லி: கடந்த ஜூலை மாதத்தில், பயணியர் வாகனங்கள் விற்பனை ஏற்றத்தை கண்டுள்ளது. ‘மாருதி சுசூகி, ஹூண்டாய், டாடா ... மேலும்
business news
புதுடில்லி-–கடந்த ஜூலை மாதத்தில், ஜி.எஸ்.டி., வசூல் 1.49 லட்சம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. ஜி.எஸ்.டி., அறிமுகம் ... மேலும்
business news
புதுடில்லி–நாட்டின் முதல் ‘5ஜி’ ஸ்பெக்ட்ரம் ஏலம், நேற்றுடன் முடிவடைந்தது. கடந்த ஏழு நாட்களாக நடைபெற்ற இந்த ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)