பதிவு செய்த நாள்
23 ஜன2017
07:28
முதலீட்டாளருக்கு தேவையான அடிப்படை அம்சங்கள் சில இருக்கின்றன. இந்த அம்சங்களை உண்மையான முதலீட்டாளர்களுக்கும், நடிப்பு முதலீட்டாளர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாட்டை விவரிப்பதன் மூலம், சுவாரசியமாக தனிநபர் நிதி வல்லுனரான, காரல் ரிச்சர்ட்ஸ் ஒரு கட்டுரையில் முன்வைத்துள்ளார். முதலீட்டாளர்கள் போல், பாவனை செய்பவர்களை தான், அவர் நடிப்பு முதலீட்டாளர் என்கிறார். இவர்களுக்கும், நல்ல முதலீட்டாளர்களுக்கும் உள்ள முக்கிய வேறுபாடுகளை அறிந்து கொள்வது, முதலீடு பற்றிய தெளிவை கொடுக்கும்.
நடிப்பு முதலீட்டாளர்கள்
l எப்போதும் நிதி செய்திகளை, நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் ஆவலுடன் பின் தொடர்ந்து கொண்டிருப்பர். இவை எல்லாமே, தாங்கள் நிதி முடிவுகளை மேற்கொள்வதற்கான முக்கிய தகவல்கள் என, நினைத்துக் கொண்டிருப்பர் l ஆட்சி மாற்றம் அல்லது புதிய கொள்கை முடிவு போன்ற செய்திகள் மற்றும் அவற்றின் தாக்கத்தின் அடிப்படையில், தங்கள் முதலீட்டு முடிவுகளை மாற்றிக் கொள்வர்l முதலீடுகளின் செயல்பாட்டை ஓயாமல் கண்காணித்துக் கொண்டே இருக்க வேண்டும் என, நினைப்பர். ஸ்மார்ட்போன் மூலம், அவற்றின் பலன்களை பின் தொடர்ந்து கொண்டே இருப்பர்l தங்களின் முதலீடு பற்றி, எல்லாரிடமும் அதிக ஆர்வத்துடன் பேசுவர். நுகர்வோர் பழக்கம் தொடர்பான செய்தி, உலக நிகழ்வின் தாக்கம் போன்றவற்றை ஆதரித்து பேசுவர்l எங்கோ நடைபெறும் ஒரு நிகழ்வு, தங்கள் முதலீட்டை பாதிக்குமா என, தொடர்ந்து கவலைப்படுவர்l சந்தையின் ஏற்ற, இறக்கம் பற்றியும், அவை தங்கள் முதலீட்டை பாதிக்கும் விதம் பற்றியும், முடிவில்லாமல் பேசிக் கொண்டிருப்பர்.
உண்மையான முதலீட்டாளர்கள்
l நிதி செய்திகள் முக்கியமானவை என்பதை அறிந்திருந்தாலும், அவற்றின் அடிப்படையில் மட்டும், முடிவெடுக்க முற்பட மாட்டார்கள்l வெளி நிகழ்வுகளுக்கு மாறாக, தங்கள் வாழ்க்கையில் நடைபெறும் நிகழ்வுகள் அடிப்படையிலேயே, நிதி முடிவுகளை மேற்கொள்வர். தங்கள் நிதி இலக்குகளை நன்றாக பரிசீலித்து, அதற்கேற்ப முதலீடுகளை நாடுவர்l முதலீட்டு மரம் பலன் தர, அது முதலில் வளர்ந்து மரமாக வேண்டும் என, பொறுமையாக காத்திருப்பர். அடிக்கடி, அதன் வேர் நன்றாக இருக்கிறதா என, பார்க்க மாட்டார்கள் l உலக பொருளாதாரம் வேறு; தங்கள் தனிப்பட்ட பொருளாதாரம் வேறு என அறிந்திருப்பதுடன், தங்கள் வாழ்க்கை பொருளாதாரம் குறித்தே, அதிகம் கவனம் செலுத்துவர்l தங்கள் கட்டுப்பாட்டில் உள்ள சேமிப்பு, செலவு பழக்கம், நிதிச் சாதனத்திற்கான கட்டணங்கள் போன்றவை குறித்தே, அதிகம் கவனம் செலுத்துவர். ஏறும் போது வாங்க வேண்டும் என்றோ, இறங்கும் போது விற்க வேண்டும் என்றோ நினைக்காமல், நிதானமாக செயல்படுவர் l ஏற்ற, இறக்கம் பற்றி அதிகம் அலட்டிக் கொள்ளாமல், சந்தையின் நீண்ட கால பலனை நினைத்து மகிழ்வர்.
மேலும் வங்கி மற்றும் நிதி செய்திகள்
|
Advertisement
|
Advertisement
|
Advertisement
|
|
|
|