நுால் விலை மீண்டும் உயர்வுநுால் விலை மீண்டும் உயர்வு ...
வர்த்தகம் » ஜவுளி
மீண்டு வரும் திருப்பூர் பின்னலாடை துறை
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஜன
2021
20:55

திருப்பூர்:‘பொங்கலுக்கு பின், திருப்பூர் பின்னலாடைத்துறை சிறப்பதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன’ என்கின்றனர், பின்னலாடைத் துறையினர்.

ஆயத்த ஆடை ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சில்(ஏ.இ.பி.சி.,) தலைவர் சக்திவேல் கூறியதாவது: ஊரடங்கு காலத்தில், மற்ற நகரங்கள் முழுமையாக முடங்கின. ஆனால், முழு கவச ஆடை; முக கவசம் தயாரிப்பு என, திருப்பூர் பின்னலாடை துறை, தன்னை உயிர்ப்புடனேயே வைத்திருந்தது.

தற்போது, இன்னல்கள் எல்லாம் விலகிவருகின்றன. கொரோனாவுக்கு தடுப்பூசி தயாராகிவிட்டது.செயற்கை இழை ஆடை உற்பத்தியை ஊக்கப்படுத்தும் வகையில், மத்திய அரசு சிறப்பு திட்டங்களை விரைவில் அறிவிக்க உள்ளது. அரசின் ஊக்கம்; தொழில் முனைவோர் மற்றும் தொழிலாளரின் கடின உழைப்புக்கு, நிச்சயம் வெற்றி கிடைக்கும். தை பிறந்தால் வழி பிறக்கும். இந்த ஆண்டு, ஆடை உற்பத்தி துறைக்கு பிரகாசமானதாக அமையும்.இவ்வாறு கூறினார்.

திருப்பூர் ஏற்றுமதியாளர் சங்க தலைவர் ராஜா சண்முகம் கூறியதாவது:கொரோனா பாதிப்புகளில் இருந்து, திருப்பூர் பின்னலாடை துறை, மீண்டுவருகிறது. அமெரிக்கா, ஐரோப்பா உட்பட உலகளாவிய நாடுகளில் இருந்து, ஆடை தயாரிப்புக்கான, வர்த்தக விசாரணை வருகை அதிகரித்துள்ளது.

சீனாவுக்கு செல்ல வேண்டிய குளிர்கால ஆடை தயாரிப்பு ஆர்டர்கள், நம் நாட்டை நோக்கி வந்துகொண்டிருக்கின்றன. ஆனால், குளிர்கால ஆடை தயாரிப்பில், நாம் பின்தங்கியுள்ளோம். பின்னலாடை நிறுவனங்கள், குளிர் கால ஆடை உற்பத்தியை மேம்படுத்த வேண்டும்.இவ்வாறு, ராஜா சண்முகம் கூறினார்.

Advertisement

மேலும் ஜவுளி செய்திகள்

business news
திருப்பூர்:தமி­ழக நுாற்பா­லை­கள், ஒசைரி நுால் விலையை உயர்த்தி, புத்­தாண்டு நாளில், திருப்­பூர் ஆடை உற்­பத்தி ... மேலும்
business news
திருப்பூர்:ஐரோப்பிய நாடுகளில், கொரோனா, இரண்டாவது பரவல் துவங்கியுள்ளதால், திருப்பூர் பின்னலாடை ஏற்றுமதி ... மேலும்
business news
திருப்பூர்:இந்திய ஆயத்த ஆடை ஏற்றுமதி வர்த்தகம், இயல்பு நிலைக்கு திரும்பத் துவங்கியுள்ளது.கொரோனா பாதிப்பால், ... மேலும்
business news
திருப்பூர்:கொரோனா காலத்தில், திருப்பூர் பின்னலாடை துறையினருக்கு, 201 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி., ‘ரீபண்டு’ ... மேலும்
business news
திருப்பூர்:நடைமுறைக்கு ஒவ்வாத கட்டுப்பாடுகளை தளர்த்தி, முக கவசம், முழு கவச ஆடை ஏற்றுதிக்கு, அரசு கை கொடுக்க ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g to toggle between English and Tamil)