66.68 கோடி வாடிக்கையாளர்கள் 66.68 கோடி வாடிக்கையாளர்கள் ...
வர்த்தகம் » சந்தையில் புதுசு
பி.ஓ.எஸ்., நிதி சேவையிலும் கலக்க வருது, 'ஆர்ஜியோ' முகேஷ் அம்பானியின் அடுத்த அதிரடி ஆரம்பம்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

11 ஜன
2019
00:14

மும்பை:தொலை தொடர்பு சேவையில் களமிறங்கி, 'ஏர்டெல்' உள்ளிட்ட முன்னணி நிறுவனங்களை கதி கலக்கிய, முகேஷ் அம்பானியின், 'ரிலையன்ஸ் ஜியோ' நிறுவனம், அடுத்து, வணிகர்கள் பணப் பரிவர்த்தனைக்கு பயன்படுத்தும், பி.ஓ.எஸ்., சேவையிலும் களமிறங்க உள்ளது.


இது குறித்து, தகவல் அறிந்த வட்டாரங்கள் கூறியதாவது:பல்பொருள் வணிக மையங்கள், சில்லரை விற்பனை கடைகள் ஆகியவை, மின்னணு தொழில்நுட்பத்தில், பணப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள, பி.ஓ.எஸ்., எனப்படும், கையடக்க சாதனத்தை பயன்படுத்துகின்றன.
இதில், வாடிக்கையாளர், 'டெபிட், கிரெடிட்' கார்டுகள் மூலம், வாங்கும் பொருட்களுக்கு பணம் செலுத்தலாம்.அந்த பரிவர்த்தனைக்கு, கடைக்காரர், குறிப்பிட்ட சேவைக் கட்டணத்தை, வாடிக்கையாளரின் வங்கிக்கு செலுத்த வேண்டும்.


சென்னை


இத்தகைய, பி.ஓ.எஸ்., சேவையை, சென்னை, மும்பை, பெங்களூரு உள்ளிட்ட ஆறு நகரங்களில் சோதனை அடிப்படையில், ஆர்ஜியோ ஏற்கனவே துவக்கி விட்டது.இந்த சாதனத்தை நிறுவ, வணிகர்கள், மளிகை கடைக்காரர்கள் உள்ளிட்டோர், ஆர்ஜியோ வுக்கு, 3,000 ரூபாய் டெபாசிட் செலுத்த வேண்டும். டெபிட், கிரெடிட் கார்டுகளில், 2,000 ரூபாய் வரையிலான பரிவர்த்தனைகளுக்கு, சேவைக் கட்டணம் இல்லை என, ஆர்ஜியோ தெரிவித்துள்ளது.


இதன் காரணமாக, ஆர்ஜியோவின், பி.ஓ.எஸ்., சாதனங்களை நிறுவ, வணிகர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.தற்போது, இச்சேவை யில், ரிலையன்சின், 'ஆர்ஜியோ மணி' மற்றும் தேசிய பணப் பட்டுவாடா கழகத்தின், 'பீம்' ஆப் வாயிலான பரிவர்த்தனைகள் ஏற்றுக் கொள்ளப்படுகின்றன. விரைவில், மேலும் பல மின்னணு பணப் பை நிறுவனங்களின் சேவைகள் இணைக்கப்பட உள்ளன.


ரிலையன்ஸ் ஏற்கனவே, 'ரிலையன்ஸ் ரீடெய்ல், ரிலையன்ஸ் பிரெஷ், ரிலையன்ஸ் டிரெண்டு' உள்ளிட்ட சில்லரை விற்பனை துறையில் ஈடுபட்டு வருகிறது. அதனால், இத்துறையில், ஆர்ஜியோவின், பி.ஓ.எஸ்., சேவை, மிக விரைவாக வளர்ச்சி காணும் எனத் தெரிகிறது.இவ்வாறு அந்த வட்டாரங்கள் கூறின.


கடும் போட்டி


ஆர்ஜியோ, பி.ஓ.எஸ்., சந்தையில், 'பேடிஎம், போன்பீ' உள்ளிட்ட நிதி தொழில்நுட்ப சேவை நிறுவனங்களுக்கும், இச்சந்தையில், 70 சதவீத பங்கை கொண்டுள்ள வங்கிகளுக்கும், கடும் போட்டியை ஏற்படுத்தும் என, எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement
Share  
Bookmark and Share

மேலும் சந்தையில் புதுசு செய்திகள்

business news
பி.எஸ்.என்.எல்., நிறுவனத்துக்கு, நாடு முழுவதும் உள்ள நகரங்களில் 66.68 கோடி வாடிக்கையாளர்கள் உள்ளதாக அந்நிறுவனம் ... மேலும்
business news
புவனேஸ்வர்: முகேஷ் அம்பானியின், ‘ரிலையன்ஸ் ஜியோ’ மூன்று கோடி வர்த்தகர்களின் வியாபாரம் செழிக்க, தொழில்நுட்ப ... மேலும்
business news
ஸ்மார்ட் ஸ்பீக்கர் வாங்க நினைப்பவர்கள், இன்னும் கொஞ்ச நாள் பொறுத்திருக்கலாம். பிரபல சீன நிறுவனமான, வாவேய் (சீன ... மேலும்
business news
சில படங்கள் தீபாவளிக்கு ரிலீசாகப் போவதாக அறிவித்து, எதிர்பார்ப்புகளை அதிகப்படுத்தி, கடைசியில் வராமல் ... மேலும்
business news
வல்லவனுக்கு வல்லவன் இல்லாமலா இருப்பான்?மிபேண்டு 2 மி, பேண்டு 3 இவற்றுக்கு போட்டியாக ஏ.எப்.பி.,20 எனும் புதிய ... மேலும்
  தினமலர் முதல் பக்கம்
வர்த்தகம் முதல் பக்கம் »
Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
  • தங்கம்
  • வெள்ளி
  • கரன்சி
  • மளிகை மார்க்கெட்
 
வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள்.
1.செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.
வாசகர் கருத்து
முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய :
Login :

( OR )Login with
New to Dinamalar ?
வாசகர்கள் கருத்துப் பகுதியில் வெளியாகி இருக்கும் கருத்துக்கள், உரிய முறையில் தணிக்கை செய்யப்பட்டே வெளியி‌டப்படுகின்றன.
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)